பக்கம்:நனவோட்டங்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 : ரா. சீனிவாசன் அன்று அவள் கடைக்காரியாக இல்லை. வீட்டுக்காரியாக இருந்தாள். சேலை புதிது. அவள் சம்பாதனையில் வாங்கியது என்று நினைக்கிறேன். தம்மில் இருந்து தமது சம்பாதனையில் அவள் வாங்கி உடுத்திய சேலை அது. "புரட்சி என் முன் வந்தாள். அவளை அன்றுதான் முழுமையாகப் பார்த்தேன். அதாவது அவளைக் கலியானப் பெண்ணைப் பார்ப்பது போலப் பார்த்தேன். கடையில் இருந்த வன்முறை அவளிடம் காணப்பட வில்லை. உஷாவின் தங்கையைப் போல் அவள் அடக்கமாகவே காணப்பட்டாள். ஒவியர் எனக்காக இலை வாங்கச் சென்றார். அவளிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. "2ந் தேதி” என்றேன். அவள் புரிந்துகொண்டாள். - "எங்களுக்கு அப்படி முதல் தேதி இரண்டாம் தேதி என்பதில்லை. எல்லாம் ஒரு தேதிதான்” என்று சாமர்த்தியமாகப் பதில் சொன்னாள். அவளைத் திரைப்படத்துக்கு அழைத்தேன். அதற்கு மறுப்புத் தெரிவித்தாள் என்பதுதான் இந்த பதில் "இரண்டு டிக்கட் வாங்கி வைக்கிறேன்” என்று அதை விரைவில் முடித்தேன். "உங்களுக்கும் உங்கள் ஆபீசு." "ஆபீசு பையனுக்கும் சேர்த்துத்தான்” என்று அதை விரைவில் முடித்தேன். "நான் இப்பொழுது முடிவுக்கு வந்துவிட்டேன்” என்றேன். "எதற்கு?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/108&oldid=772802" இலிருந்து மீள்விக்கப்பட்டது