பக்கம்:நனவோட்டங்கள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 107 'நீ முன் யோசனை செய்து சொல்லச் சொன்னாயே அதற்கு" என்றேன். "அவர் வந்தால் அவரிடம் சொல்லுங்கள்” என்றாள். அதற்குமேல் அவளிடம் பேச முடியவில்லை. ஒவியர் கையில் இலையோடு வந்தார். "இங்கே வாழை இலை கிடையாது.” "தையல் இலை தானே.” "ஆமாம் இங்கே பெண்கள் தைத்து விற்கிறார்கள். வயதான பாட்டிமார்க்கு அதுதான் இங்குத் தொழில்" எனறாா. "பாட்டி இலை' என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். நான் என்ன சாப்பிட்டேன் என்று எழுதலாம். அது சைவர்க்குப் பிடிக்காது. அதனால் அதைப் பற்றி எழுத விரும்பவில்லை. அவள் நன்றாகவே சமையல் செய்து இருந்தாள். 'முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் என்ற ஒரு கவிதையைப் பற்றிய விமரிசனத்தை எங்கள் தமிழாசிரியர் ஒரு முறை சொல்லி இருக்கிறார். அழகிய கவிதைச் சித்திரம் அது. கலியாணமான பெண்; புதுக் குடித்தனம் நடத்தினாள். தானே குழப்பி வைத்த குழம்பு. அதாவது புளிக்குழம்பு. அவளுக்குச் சமையல் தெரியாது. அதுதான் ஆரம்ப முயற்சி; அதனால்தான் குழம்பு என்று சொன்னார் கவிஞர் என்பது தமிழாசிரியர் தந்த விளக்கம். அதைச் சாப்பிட்டவுடன் சமையல் நன்றாக இருக்கிறது என்று பாராட்டி இருந்தானாம். வேறு எப்படிச் சொல்ல முடியும். அவள் முகத்தில் புது மகிழ்ச்சி உண்டாயிற்றாம். எப்பொழுதோ கேட்ட அந்தப் பாட்டின் கருத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/109&oldid=772804" இலிருந்து மீள்விக்கப்பட்டது