பக்கம்:நனவோட்டங்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் , 9 கொண்டிருந்தார்கள். கத்திக் குரைக்கும் நாய்கூட அடங்கிப் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தது. ஏன் அந்த வீடுகளில் டெலிவிஷன் போகக்கூடாது. அவர்கள் முகத்தில் எவ்வளவு சந்தோஷம் நிரம்பும்! ஒலி புகுந்தது ஆனால் அவர்கள் வாழ்வில் ஒளி புகவில்லை என்று நினைத்துப் பார்த்தேன். - அந்தக் குடிசை வீட்டுப் பிள்ளைகள் அடையாளம் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. பார்த்தாலே தெரிகிறது. ஒழுங்காகச் சட்டை அணிந்து கொண்டு கான்வெண்டில் கற்றுக்கொள்ளும் ஆங்கிலம் பேசும் சிறுவர்களைக் கண்டால் எனக்குப் பிடிப்பது இல்லை. அவர்கள் பேசும் ஆங்கிலம் என்னைக் கவர்வது இல்லை. சின்ன வயதில் தாய்மொழி பேச வேண்டும் குழந்தைகள் ஆங்கிலத்தைத் தடுமாறி ஆய் ஊய் என்று கத்திப் பேசுவது என்னைக் கவரவில்லை. இவர்கள் பேசும் தமிழ் என்னைக் கவர்ந்து விடும். அக்கா அம்மா என்று உறவுச் சொற்களை அவர்கள் பேசும் பொழுது அவர்கள் யார் என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த நாட்டு எதிர்காலக் குடிமக்கள் இவர்கள்; வாக்குரிமை ஒன்றுக்கு மட்டும் அவர்கள் சொந்தக் காரர்கள். வேறு எந்த உரிமைக்கும் அவர்கள் சொந்தக் காரர்கள் அல்ல. அவர்கள்தான் நாட்டின் எதிர்காலத்தை நிச்சயிக்கப் போகிறார்கள். நாம் மேலே என்னன்னவோ செய்ய முயல்கிறோம். வாழ்க்கையில் ஒழுங்கு கட்டுப்பாடு என்னன்னமோ பேசுகிறோம். அந்தச் சிறுவர்கள் தாம் யார் என்பதைப் பற்றி எப்பொழுதோ மறந்தவர்களாக இருந்தார்கள். அப்பா அம்மா இந்த பாச பந்தங்களை எப்பொழுதோ அறுத்து எறிந்த ஞானிகளாகக் காணப்பட்டார்கள். வேலைக்குப் போகவில்லை என்றால் 'வாங்கு வாங்கு' என்று அவர்கள் பெற்றோர்கள் அடிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/11&oldid=772806" இலிருந்து மீள்விக்கப்பட்டது