பக்கம்:நனவோட்டங்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ரா. சீனிவாசன் அப்பொழுது நினைவுக்கு வந்தது. திடீர் என்று பெருச்சாளி ஒன்று அந்தப் பக்கம் ஓடியது. அவர் தடி கொண்டு அதை அடித்து நொறுக்கி வெளியே போட்டார். 'மண் குடிசையில் பெருச்சாளி' என்றேன். இது சகஜம், அவ்வப்பொழுது அடித்துப் போடுவது வழக்கம் என்றார். அதற்குமேல் அங்குச் சாப்பிட்டுக் கொண்டிருக்க இலையில் ஒன்றுமில்லை; எல்லாம் காலி செய்துவிட்டேன். "பரவாயில்லையே ஒன்றும் விடாமல் சாப்பிட்டு விட்டீர்களே." "இது என்ன கலியாணச் சாப்பாடா வீண் படுத்து வதற்கு" என்றேன். இலை அகற்றப்பட்டது. "நீங்கள் அடிக்கடி வரவேண்டும்" என்றார். “வந்து பேச வேண்டும்” என்று சொல்லவில்லை. அப்பொழுது என் முடிவை அவரிடம் பேச நினைத்தேன். அதற்கு அப்பொழுது வாய்ப்புக் கிடைக்க வில்லை. ஒரே கூட்டத்தில் எப்படி எல்லாவற்றையும் பேச முடியும்? ஒத்தி வைப்பு நல்லதுதானே! 9 "புரட்சிப் பாதை பயங்கரமானது என்பது குப்பத்துக்குச் சென்று வந்த பிறகுதான் தெரிந்தது. நான் தான் புரட்சிக்காரன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நான் அதுவும் முதற்படியில் தான் நிற்கிறேன். அதுவும் என் கவர்ச்சிக்காக ஒரு விதவையை மணப்பது என்பது. இது சீர்திருத்தம் அள்ளவுதான். இது முதற்படி, ஒவியர் மூன்றாவது படியில் நின்று பேசுவது பயங்கரமானதுதான். அடியோடு மாற்றங்கள் நடக்கத்தான் போகிறது என்று உறுதியாகச் சொல்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/110&oldid=772808" இலிருந்து மீள்விக்கப்பட்டது