பக்கம்:நனவோட்டங்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 109 தீய சக்திகளும் இம்மாற்றங்களில் ஈடுபடும் பொழுது அது குழப்பத்தில் கொண்டுபோய் விடும் என்று எண்ணத் தொடங்கினேன். பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவித்து விடுவார்கள். இங்கேதான் காந்தீயம்' மக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று நினைத்தேன். அவர் வழியும் தேவை; முடிவும் தேவை என்று எண்ணாமல் இல்லை. வன்முறையை என்னால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. ஜனநாயகம் என்பது அமைதியான தேர்தல் முறை; கருத்து விளக்க முறை. அதை ஒப்புக்கொண்ட பிறகு வன்முறையில் ஈடுபடுவது பயன் இல்லை. தெளிவு அடைவதற்கு முன்னால் குழப்பம்தான் மிஞ்சும் என்று நினைக்கத் தொடங்கினேன். சங்கங்களும் கழகங்களும் மிகுதியாக இயங்க வேண்டும். ஆனால் அவை வன்முறையில் ஈடுபடும்பொழுது அவை செயல் இழந்து விடுகின்றன. இதைத் தவிர்ப்பதற்கு வழி? எனக்கே விளங்கவில்லை. இவை எல்லாம் அரசியல் வாதிகள் முடிவு செய்யவேண்டும். நான் எப்படி முடிவு செய்ய முடியும். நாட்டில் சட்டத்துக்கு மதிப்புத் தந்தால் தான் அமைதி நிலவும். அந்தச் சூழ்நிலையிலேயே போராட்டம் நிகழ வேண்டும். ஒவியர் தன் குடிசையில் தீட்டி வைத்த போராட்டம் என்னும் சித்திரம் எனக்குப் பிடிக்கவில்லை. போலீசோடு மோதுவது என்பது நியாயமாகப் படவில்லை. அப்படி அவர்களோடு மோதுவது என்பது சட்டத்தோடு மோதுவது என்பதுதான் பொருள். சமுதாயக் கட்டுக்கோப்பைத் தகர்த்து எறியும் முயற்சி அது. அதைப் புரட்சி என்று கூற முடியாது. சட்டத்துக்கு மதிப்புத் தந்துதான் ஆக வேண்டும். அவர் இப்பொழுதைய நிலையைத் தீட்டிக் காட்டுகிறார் என்பதுதான் அதற்கு அர்த்தம். அதை அவர் ஆதரிக்கிறார் என்பது அதன் கருத்து அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/111&oldid=772810" இலிருந்து மீள்விக்கப்பட்டது