பக்கம்:நனவோட்டங்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ( ரா. சீனிவாசன் 'அவள் அன்று சொன்னது உண்மைதான். எனக்குத் திருமணம் ஆகி இருந்தால் எனக்குச் சலனங்கள் ஏற்பட்டே இருக்காது. கீழ்த்தரமான விஷயங்களில் ஏற்படும் தடுமாற்றத்தைத்தான் 'சலன புத்தி' என்று சொல்லு வார்கள். நான் உயர்ந்த லட்சியங்களுக்குத் தாவுகின்றேன். புரட்சி காதல் சமதர்மம் இந்த மூன்றுக்குள்தான் என் எண்ணங்கள் அலைமோதுகின்றன. இதை எப்படித் தவறு என்று கூற முடியும்? யாருக்குமே எது நல்லது என்பது தெளிவாகத் தெரிவதில்லை. எதையும் முடிவு செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல; சாதாரண போக்கிலேயே தெளிவு ஏற்படுகிறது அருமை என்றால் என்னைப்போல அசாதாரண போக்கு உடையவர்களுக்கு எதுவும் முடிவு செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. உண்மையிலேயே எனக்குத் திருமணம் ஆகி இருந்தால் இந்த மாதிரி சலனங்கள் ஏற்பட்டு இருக்காது. உஷாவைப் பற்றி நினைக்கிறது என் மனம்; இந்தக் குப்பத்துக் குடிசையை நாடுகிறது மற்றொரு மனம் எந்தக் தொந்தரவும் இல்லாமல் உஷாவின் தங்கையை மணம் செய்துகொண்டு ஒரு சாதாரண ஆண் ப்ெண் நடத்தும் இல்லற வாழ்வை நடத்தத் தூண்டுகிறது மற்றொரு மனம். உலகம் இந்த மூன்றாவது நிலையைத்தான் விரும்பு கிறது. தடம் புரண்டு செல்லாத ஒழுங்கான வாழ்க்கை அதுதான். இப்படித்தான் எல்லோரும் வாழ்கிறார்கள். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எது எப்படிச் சுவை மிக்க வாழ்க்கை என்பது என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. அதைத்தான் எங்கேயும் பார்க்கிறேன். அழைப்பிதழ் என்பதன் பேரில் 'மங்கலம் என்ப மனை மாட்சி' என்ற தொடர் என்னை வந்து அடைகிறது. ஒவ்வொருவரும் இந்த மாட்சியைத்தான் விரும்புகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/112&oldid=772812" இலிருந்து மீள்விக்கப்பட்டது