பக்கம்:நனவோட்டங்கள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 111 "மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு" இரண்டும் என் வீட்டில் புகும் அவளை மணந்தால், வீட்டுக்கு அழைத்து வந்தால்தானே அந்தப் பிரச்சனை. நாங்கள் எங்காவது தனிக்குடித்தனம் நடத்தினால், அப்பொழுது அம்மாவுக்கு அஞ்சி எதையும் செய்யாதிருக்க முடியுமா. அஞ்சித்தான் வாழவேண்டும். பழமைக்கும் அஞ்சித்தான் வாழவேண்டி இருக்கிறது. அவசரப்பட்டுப் பழமைக்கு மதிப்புத் தராவிட்டால் புதுமை ஒட்டாமல் போய்விடும். இவ்வாறு இந்த நினைவுகள் எழுந்து கொண்டிருந்தன. மனப்போராட்டம் என்று சொல்வதற்கு இல்லை. அதெல்லாம் பழைய நிலை. வெறும் மனப் போராட்டங்களுக்கே மதிப்புத் தந்தால் எந்தக் காரியமும் துணிந்து செய்ய முடியாது. யாரை வீட்டுக்கு அழைத்துச் செல்வது என்பதில் தான் என் மனப்போராட்டம்; ஒய்வு கொள்ளவில்லை. உஷாவின் எதிர்காலம்? அவளைப் பற்றியும் எண்ணாமல் இருக்க முடியவில்லை. உஷா ஒரு தனி வாழ்க்கையைப் பெற்றிருந்தாள். அவள் புரட்சியைப்போல் முடிந்துவிட்ட கதை அல்ல. 'அவள் ஒரு தொடர்கதை' படம் பார்த்திருக்கிறேன். தான் பிறந்த குடும்பம் வறுமையின் பிடியில் அகப்பட்டு நசுங்கிப் போகாமல் இருப்பதற்காக அவள் ஒடி ஒடி உழைத்தாள். அதற்கப்புறம் அவள் வண்டியை மிஸ் பண்ணி விட்டாள். அந்த மிஸ் என்ற பட்டத்தைத் தாங்கி அதை அவள் ‘விசிட்டிங் கார்டில் தன் பெயருக்கு முன்னால் நிரந்தரமாகப் பொருத்திக்கொண்டாள். உஷா மிஸ் அல்ல. வாழ்ந்துகொண்டே வாழமுடியாத வாழாவெட்டி'. இப்படி அவள் எதிரிகள் அவளுக்குப் பட்டம் சூட்டினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/113&oldid=772814" இலிருந்து மீள்விக்கப்பட்டது