பக்கம்:நனவோட்டங்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 ரா. சீனிவாசன் அவள் வாழ்க்கைப்படப் புகுந்த அந்தவீட்டினர் அப்படிப் பேசினர். கணவன் என்ன சொன்னாலும் அவள் கேட்டுக் கொண்டுதான் இருக்கவேண்டும் என்பது சலனமற்ற அவர்கள் எண்ணம். 'என்ன சொல்லிவிட்டான்; அவளைப் பார்த்துச் சந்தேகப்பட்டான். எந்தப் பெண்ணை யும்தான் சந்தேகப்படுவார்கள். இவள் ஏன் எப்பொழுதும் அலங்காரம் செய்துகொள்ள வேண்டும். கண்ணுக்கு ஏன் மையிட்டுக் கொள்கிறாள். தலைக்கு ஏன் இவ்வளவு பூ: அதுக்கும் ஒரு அளவு இல்லையா. அவங்க அப்பன் என்ன மாதா மாதம் மணியார்டரா செய்கிறார். என்னத்தான் அழகாக இருந்தாலும் அவ்வளவு திமிர் இருக்கக் கூடாது; சதா பவுடர் பூச வேண்டுமா? போகட்டும் சாயுங்காலம் ஆனால் ஏன் தெருவிலே வெளியே நிற்கவேண்டும். இப்படி எல்லாம் பேசியதை அவள் எனக்கு எடுத்துச்சொல்லி இருக்கிறாள். - மற்றும் அவள் ஒருநாள் சொன்னாள் "நான் அவனோடு எப்படி வாழமுடியும்? ஒருநாள்கூட அவன் அன்பாகப் பேசிப் பார்த்தது இல்லை. வா வெளியே என்று அழைத்துப் போனது இல்லை. நான்கு சுவர்களில் வைத்து என்னை அடக்கி வைத்தான். ஒருநாள்கூட என் உள்ளத்தை மதித்தது இல்லை. காதல் கலந்த சொற்களைக் கேட்டது இல்லை. என் உடலைத்தான் மதித்தான். முன் சொன்னேனே அந்தச் சொல்தான் நினைவுக்கு வருகிறது. அசிங்கமாக நடப்பான்; அழகு உணர்ச்சியே அவனுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. நான் என்ன மென்மையான உணர்ச்சி அற்றவளா? பெண் மென்மை உடையவள் என்பதை அவன் அறிந்ததே இல்லை. அவனை ஒரு மிருகமாகப் பார்க்க முடிந்ததே தவிர மனிதனாக நான் பார்த்தது இல்லை.” இப்படி எல்லாம் அவனைப் பற்றி அவள் சொல்லி இருந்தாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/114&oldid=772816" இலிருந்து மீள்விக்கப்பட்டது