பக்கம்:நனவோட்டங்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 113 அனுபவங்கள் என் வாழ்க்கையில் அறிய வாய்ப்பு இல்லை. அதற்காகவாவது நிச்சயம் மணம் செய்து கொள்ள வேண்டும். நான் எப்படி நடந்து கொள்வேன் என்பது எனக்கே தெரியவில்லை. அவளிடம் நெருங்கிப் பழகும் பொழுது ஒரு சில சொற்களை உதிர்ப்பாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாகப் பால் உறவுகளைப் பற்றிப் புத்தகங்கள் படித்திருக்கிறேன். அதில் ஆணின் மிருக உணர்வைப் பெண் விரும்புகிறாள் என்பதை வற்புறுத்தி இருக்கிறார்கள். அவற்றைத்தான் படித்திருக்கிறேன். அது பொய் என்பதை அவள் சொற்களில் அறிய முடிந்தது. என் வாழ்க்கை' என்ற நாவலிலும் அதன் ஆசிரியையும் அப்படித்தான் எழுதுகிறார். "என்னை வற்புறுத்தி அவர் இச்சையை முடித்துக் கொள்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை" என்று எழுதி இருக்கிறாள். அதே போல இவள் பேசியதும் எனக்கு வியப்பாக இருந்தது. நான் அவளை மணந்து கொண்டால் எப்படி நடந்து கொள்வேன். நிச்சயமாக அவள் உடல் என்னைக் கவராது. என்னைப் பொறுத்தவரை அவள் உள்ளத்தில் நான் ஒன்றிப் போக வேண்டும். அந்த அன்பு உள்ளத்திலே நான் நீந்தி விளையாட வேண்டும். அவள் அன்பு ஊறும் விழிகளுக்கு நான் விருந்தாக வேண்டும். திருமணத்தைத் தள்ளிப் போட்டுவிட்டதால் என் மனம் பண்பட்டு விட்டதா அதுவும் தெரியவில்லை. அவள் என்னோடு பழகும் பொழுது சில சமயம் சிறு குழந்தையாக இருப்பாள்; பேசும் போது அறிவு மேதையாகத் தெரிந்தாள் பழகும் பொழுது அவள் இனியவளாக இருந்தாள். அவளோடு பேசுவதில் பழகுவதில் என்னால் ஒரு தனி இன்பத்தைக் காண முடிந்தது. ஆபீசில் அவள் ஒரு குமாஸ்தா தான். வெளியே பழகும்பொழுது அவள் என் சிநேகிதி, என் கற்பனையில் நான் விரும்பும் இனிய காதலி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/115&oldid=772818" இலிருந்து மீள்விக்கப்பட்டது