பக்கம்:நனவோட்டங்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ரா. சீனிவாசன் fļ *_3} அவள்" - அது வேறு. அவள் உடல் என்னைக் கவர்ந்தது. துடுக்குத்தனம் என்னை இழுத்தது. அவளிடம் வன்மையும் இருந்தது; இனிமையும் இருந்தது. ஆனால் மென்மை இல்லை. அதற்கு அவள் சூழ் நிலைதான் காரணம். காடு மேடுகளில் வயற்காட்டில் வேலை செய்யும் வனிதையர்களின் வனப்பு அவளிடம் காணப்பட்டது. அந்தப் பரம்பரையைச் சார்ந்தவள் அவள், கிராமங்களில் உழைத்துப் பலன் காணாமல் ஓடிவந்து பிழைக்க வந்த குடும்பங்களின் பிரதிநிதி அவள். நிலங்களின் உடைமை ஒரு சிலருக்கே சொந்தம். மாடு போல் உழைத்தும் அடிமை வேலை செய்தும் கூழும் தண்ணிரும் உண்டு. காலத்தைக் கடத்திய பரம்பரையைச் சார்ந்தவள் அவள். நகரங்களில் சிற்றாளாகக் கல் சுமந்தும், காய்கறி சுமந்தும், தன் வயிற்றை நிரப்பி வரும் குடும்பத்தைச் சார்ந்தவள் அவள். அவளிடத்தில் எப்படி உஷாவிடம் காணப்படும் மென்மை இருக்க முடியும்? - உஷாவின் உடலில் என்ன இருக்கிறது. அவள் உடலைப் பொறுத்தவரை அவள் ஒரு இயந்திரம். வயிற்றுப் பிழைப்புக்காக் நான் வேலை செய்யும் ஆபீசில் அவளும் வேலை செய்கிறாள். கோயிலில் சிற்பங்களைக் கண்டு இருக்கிறேன். அந்தச் சிற்பிகள் மட்டும் எப்படி அந்த அழகிகளைப் படைக்க முடிந்தது? மனித உருவங்களை அவற்றைப் போல இறைவன் படைத்து நான் கண்டது இல்லை. அற்புதமான் சிருஷ்டிகள். யாரோ எவளோ அப்படி ஒருத்தி இருந்திருப்பாள். மற்றைய சிற்பிகள் அதை மேலும் அழகு படுத்தி இருப்பார்கள். அவன் 'மாடல் வைத்துப் படைத்திருப்பானா யாரோ ஒரு சிலருக்குத்தான் அந்த மாடல் கிடைத்திருக்கும். ஆனால் மனித இயந்திரமாக மாறிவிட்ட உஷா நிச்சயமாக ஒரு மாடலாக ஆக முடியாது. எந்த ஒவியனும் அவளை வைத்து எழுத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/116&oldid=772820" இலிருந்து மீள்விக்கப்பட்டது