பக்கம்:நனவோட்டங்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 115 வரமாட்டான். அவள் சிதைந்த சிலையாகி விட்டாள் என்று தான் கூறமுடியும். மனித சிருஷ்டியை மதிக்கும் பொழுதுதான் அதுவும் அழகாக இருக்கிறது. அது பாழ்படுத்தப்பட்டால் அது தன் அழகை இழக்கிறது. "நீ அழகி என்பதால் தானே அவன் உன்னை வாட்டு கிறான். அதுவும் உனக்கு ஒரு வகையில் பாராட்டுதானே, அழகை அவன் மதிக்கிறான் என்பதுதான் அர்த்தம் என்றேன்.” "மதித்தால் பரவாயில்லை அதற்காகவே அவன் என்னை வெறுத்தால் அதைத்தான் நினைக்கும் பொழுது எனக்கு அழுகை வருகிறது. நான் உண்மையிலேயே அழகாகத்தான் இருந்தேன். பெண் எப்பொழுதோ ஒரு முறைதான் மிக அழகாக இருக்கிறாள். அதைத்தான் மனப்பருவம் என்று கூறுகிறார்கள்.” மேலும் தொடர்ந்தாள், "அப்பொழுது எத்தனையோ பேர் பார்க்க வருகிறார்கள். அப்பொழுது அழகைக் கட்டிக் காத்தேன். இப்பொழுது அழகு என்னைத் தட்டிக் கழித்து விட்டது. நான் ஒரு ஆபீசு குமாஸ்தா" என்று தன்னை வருணித்தாள். வளையல்கள் அணிய வேண்டிய ፴}öኛ கைக்கடியாரத்தை அணிந்திருந்தது. அது இன்று பாஷன் ஆகிவிட்டது. அவள் ஒரு தொழிலாளி என்பதை ஒரு கையில் வளையல் ஒரு கையில் கடிகாரம் காட்டியது. வீட்டில் அவள் பெண்; வெளியே அவள் தொழிலாளி. இதுதான் கைக் கடிகாரத்தின் அடையாளம். அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய மாற்றம் அது. தோளில் ஒரு பை, கையில் ஒரு கடிகாரம்; இது அவளைப் பற்றி நினைக்கும் பொழுது மறக்க முடியாத சித்திரம். இன்று பெண்மை தன் பொலிவை இழக்கிறதே என்று நினைத்து வந்தேன். எங்கேயாவது யாராவது அழகாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/117&oldid=772822" இலிருந்து மீள்விக்கப்பட்டது