பக்கம்:நனவோட்டங்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ( ரா. சீனிவாசன் இருந்தால் என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. அவளுக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் ஏற்பட்ட தில்லை. ஏற்படப் போவது இல்லை. இருந்தாலும் இந்த உலகம் அழகாக இருக்கிறது. வாழத் தகுந்த இடம்தான் என்று என்னையும் அறியாமல் எண்ணி விடுவது உண்டு. அவள் ஒரே லட்சியம் தன் தங்கைக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்பதுதான். தனக்குக் கிடைக்காத வாழ்வை அவளுக்குத் தருவதில் அவள் ஆர்வம் காட்டினாள். அந்த ஆசையால்தான் அவள் என்னோடு அதிகம் பழகினாள். அது தெரியாது. அப்படிச் சொல்லி விடவும் முடியாது. மனிதர்களுக்கு இரண்டு விதமான உணர்வுகள் இருக்கின்றன. ஒன்று உலக இயலோடு ஒரு பொருளைப் பார்ப்பது; மற்றொன்று தன் அனுபவ இயலோடு பார்ப்பது. இந்த இரண்டாவது இயலும் அவளிடம் இருக்கத்தான் செய்தது. முன்னதை வாய்விட்டுச் சொல்ல முடிகிறது; பின்னதைச் சொல்ல முடிவதில்லை. சொல்லாமல் இருப்பதும் நல்லதுதான். மனத்தில் தோன்றும் சலனங்களுக்கு எல்லாம் சொற்களைப் படைக்க முடியாது; படைக்கவும் கூடாது. என்னை நீக்கிவிட்டுக் கண்ணம்மாவின் வாழ்க்கையைப் பற்றி எண்ணிப்பார்க்கிறேன். அவள் இரண்டு குழந்தைகளுக்குத் தாய். அவளுக்கு வாழ்க்கையில் லட்சியம் இருந்தது. வாழமுடியாமையே அவள் வாழ்வின் லட்சியம். அதற்காக நடத்தும் போராட்டமே அவள் தொழிலாகவும் போய்விட்டது. அவளுக்கு ஒரு காப்பு வேண்டும். அதற்கு ஒவியர் கிடைத்தார். அவர் வாழ்வும் இந்த வகையில் நிறைவு பெறுகிறது. வறண்ட துறவில் வாழ்க்கை முடியாமல் தொண்டில் அவர் வாழ்வு சிறக்கிறது. அவர் நாளைக்குச் செத்தால் கண்ணிர் விட ஒரு ஜீவன் இருக்கிறது. அவருக்குப் பந்தம் பிடிக்க இரண்டு ஆத்மாக்கள் வளர்ந்து கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/118&oldid=772824" இலிருந்து மீள்விக்கப்பட்டது