பக்கம்:நனவோட்டங்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 117 இருக்கின்றன. தாத்தா என்று அழைக்க அவர்கள் அவரைச்சுற்றி இருக்கிறார்கள். எனக்கு அப்பா என்று அழைக்க ஒரு ஜீவனும் இல்லை. அவர் அதிருஷ்டசாலி, பெரிய பதவி கிடைத்து விட்டது. அன்புக்கு அடுத்த சொல் அருள் என்பார்கள். அப்பாவுக்கு அடுத்த பதவி தாத்தா. அவர் பதவியைப் பெற்று உயர்வு பெற்றுவிட்டார். அந்த வகையில் அந்தக் குடும்பத்தைப் பார்க்கும் பொழுது எனக்கு மனநிறைவு ஏற்பட்டது. அதைவிட நான் என்ன பெரிய வாழ்க்கை அமைத்துக் கொடுக்கப் போகிறேன். இதைப் போன்ற நினைவுகளும் வராமல் இல்லை. அவர்களை ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும் பொழுது குடும்பம்' என்ற அழகான சொல் என்னிடம் அமைந்தது. என் தாயும் நானும் மட்டும் இருப்பது ஒரு குடும்ப மாகப் படவில்லை. அதே போலத் தந்தையும் மகனும் மட்டும் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டு இருந்தாலும் அது குடும்பம் என்று யாரும் சொல்லுவதில்லை. ஒரு பெரியவரைச் சந்தித்தேன். அவர் துறவி என்று தன்னைக் கூறிக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருந்தார். அவன் வயதானவனாகவே காணப்பட்டான். அவனுக்கு முப்பது வயது இருக்கும். குழந்தை மனம் படைத்தவனாக இருந்தான். அப்பா மகனைப் பத்திரமாகக் காத்து வருகிறராம். "நான் இவனைக் கேட்டுப் போகாமல் காப்பாற்றி வருகிறேன். 'பிரம்மச்சரியம் கெடாமல் காப்பாற்றி வருகிறேன் என்று சொன்னார். கன்னியைத்தான் கற்புக் கெடாமல் இருக்கக் காப்பாற்றுவதைப் பார்த்து இருக்கிறேன். காளைப் பருவம் மிக்க ஆளையும் இப்படிக் காப்பாற்றுகிறார் என்று அறிந்ததும் சிரிப்பதா சிந்திப்பதா என்று தெரியாமல் திகைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/119&oldid=772826" இலிருந்து மீள்விக்கப்பட்டது