பக்கம்:நனவோட்டங்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ( ரா. சீனிவாசன் உதைகளை அடுத்த நிமிஷமே மறந்து விடுவதைப் பார்த்திருக்கிறேன். "ஏம்பா அவனை அடிக்கிறே?" என்று கேட்டு இருக்கிறேன். "மக்கார் பண்றான் சார்! எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கிறான். வேலைக்கு மட்டும் போகமாட்டான் சார்" என்னை சார் என்ற போது என் மதிப்பு உயர்வு பெற்றதை எண்ணிப் பார்க்கிறேன். எனக்கு அவன் இந்தச் சமுதாயத்தில் கவுரவம் அளிக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டேன். நான் வெள்ளைச்சட்டை அணிந்திருந்தேன். மரியாதைக்கு உரிய நடுத்தர வயதும் எனக்கு உயர்வைத் தந்திருக்க வேண்டும். எனக்கு இந்நேரம் கலியாணம் ஆகி இருந்தால் இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாக இருந்திருப்பேன் என்று என் அம்மா அடிக்கடி சொல்வாள். அவள் ஆசையை அதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு தாய்க்கும் இந்த ஆசை இருக்கிறது. மணமானவுடன் இரண்டு குழந்தை இருக்கவேண்டும். அதன் எதிர்காலத்தைப் பற்றி அவர்கள் கவலைப்பட்ட தாகத் தெரியவில்லை, குழந்தை இல்லாத வீடு ஒரு குட்டிச் சுவர் என்று நினைக்கிறார்கள். மனைவி இல்லாத வீடு ஒரு வீடு அல்ல என்பது எனக்குத் தெரியும்; தெரிகிறது அம்மாவுக்கும் அதுதான் கவலை, "ஏன்டா கலியாணமே பண்ணிக் கொள்ளமாட்டாயா? என்று ஒருநாள் மனம் வெறுத்துக் கடைசிக் கேள்வியாகவும் கேட்டு விட்டாள். 'இல்லை என்று சொல்லி இருப்பேன். என் அம்மாவை இழக்க நான் விரும்பவில்லை. அந்த ஒரு ஆசையால்தான் அவள் என்னோடு ஒட்டிக் கொண்டிருந்தாள். எனக்குத் தெரியும், இல்லை என்று சொல்லிவிட்டால் அவள் என்னோடு இருக்க மாட்டாள். காலத்துக்கும் எனக்குச் சோறு வடித்துக் கொட்டுவதில் அவள் என்ன சுகம் காணப் போகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/12&oldid=772828" இலிருந்து மீள்விக்கப்பட்டது