பக்கம்:நனவோட்டங்கள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ( ரா. சீனிவாசன் "உங்களுக்கு ஏதாவது சொத்து இருக்கிறதா?" என்று கேட்டேன். . "அறிவுதான் சொத்து. அவனை பி.ஏ. வரை படிக்க வைத்திருக்கிறேன்” என்று சொன்னார். பையன்தான் காலையில் இருவருக்கும் சேர்த்துச் சமைக்கிறானாம். இரவு எட்டு மணிக்கெல்லாம் அவன் வீடு வந்து சேர்ந்துவிட வேண்டுமாம். அம்மா என்னை அப்படி எல்லாம் கட்டுப் படுத்தியது இல்லை. மகன் கட்டைப் பிரம்மச்சாரியாகக் காலம் கடத்துகிறானே என்பதில்தான் அவர்களுக்குக் கவலை. இது தாய் மனம் என்பதை அறிய முடிந்தது. 10 குப்பத்திற்குச் சென்று வந்தது என்னால் மறக்க முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமை பொழுது போவது சில சமயம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஏன் விடுமுறை விடுகிறார்கள் என்று தோன்றாமல் இல்லை. அவனுடைய அந்தரங்க ஆசைகள் வேகமாகச் செயல்படுகின்றன. அந்த விடுமுறை நாளில்தான் என்பது என்னைப் பொறுத்தவரை என்று உணர முடிந்தது. ஒவ்வொருவருக்கும் ரகசியமான ஆசைகள் ஒரு சில இருக்கத்தான் .செய்யும். அதில் என் ஆசை விசித்திர மானதுதான். குப்பத்திற்குச் சென்று என் புரட்சியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னை விடாமல் தள்ளியது. இதைப் போல மனத்தைச் சிதறக் கூடாது என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். 'அகல் விளக்கு' என்று நினைக்கிறேன். மிகப் பழைய கதை. எப்பொழுதோ படித்த நினைவு. அழகாக இருக்கின்ற இளைஞன் கெட்டு விடுகிறான். அழகில்லாதவன் அகல் விளக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/120&oldid=772829" இலிருந்து மீள்விக்கப்பட்டது