பக்கம்:நனவோட்டங்கள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 19 எப்பொழுதும் நிதானமாக இருக்கிறான். இரண்டும் இரண்டு எல்லைகள் என்று நினைக்கிறேன். சந்திரன் அதுதான் அழகானவன் ரொம்ப வேகமாக அழிகிறான்; வேலப்பன் தன்னைக் காத்துக்கொள்கிறான். நான் இரண்டுக்கும் இடைநிலையில் இப்படியும் அப்படியுமாய் இருக்கிறேன். என்னைப் போலத்தான் பெரும்பான்மை யோர் இருப்பார்கள் என்று நினைக்க வேண்டியுள்ளது. எல்லாரையும் எப்படி அப்படிக்கூற முடியும். நான் அப்படி இருக்கிறேன். "ஆகவே பிள்ளைகளே ஒழுக்கமே உயர்வு தரும்" என்றுதான் ஒவ்வொரு கதையும் சொல்லுகிறது. கேட்க நன்றாக இருக்கிறது. அப்படியே கட்டுப்பாடாக இருப்பதில் என்ன வாழ்க்கை இருக்கிறது. அப்படி ஒன்றும் என்னை ஒழுக்கம் கெட்டவன் என்று கூற முடியாது. காதல் என் பிறப்புரிமை; புரட்சி வளர்ச்சியின் அறிகுறி. இப்படித்தான் தாவிக் கொண்டு இருக்கிறேன். இதற்கு இடையில் விசித்திரமான மனிதர் சமுதாய உணர்வை ஊட்டி என்னைச் சுற்றுப்புறத்தையும் பார்க்க வைக்கின்றார். இதுவரை எழுந்த கதைகள் எல்லாம் தனிப்பட்டவர் வாழ்க்கையைச் சித்திரித்துக் கொண்டு இருந்தன. பால் உணர்வை மையமாக வைத்து நல்லவன் கெட்டவன் என்று மனிதர்களைப் பகுத்துக் கொண்டு இருந்தன. அந்தக் கண்ணோட்டத்தோடு தனி மனிதர்களைப் பார்ப்பது தவறு என்பதை அந்த ஒவியரிடம் பழகிய பிறகுதான் தெரிந்தது. அவர் காட்டிய சூழ்நிலையைப் பார்த்த பிறகுதான் அங்கே யார் நல்லவர் கெட்டவர் என்பது விளங்கவில்லை. சுரண்டப்படுகிறவர் சுரண்டுகிறவர் என்றுதான் மனித இனத்தைக் காணமுடிகிறது. அங்கே வாழ்பவர் அனைவரும் சுரண்டப்படுகிறவர்கள். தம் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறாதவர்கள். மனித அடிப்படைகளைக் கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/121&oldid=772832" இலிருந்து மீள்விக்கப்பட்டது