பக்கம்:நனவோட்டங்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 ( ரா. சீனிவாசன் அடைய முடியாத நிலையில் வாழ்பவர்களாகக் காணப் பட்டனர். வாழ்க்கையில் எந்த விதமான வசதியோ பரது காப்போ இல்லாதவர்களாக வாழ்கிறார்கள். இன்று வேலை கிடைக்கிறது. மறுநாள் வேலை கிடைக்கும் என்று சொல்ல முடிவதில்லை. பிள்ளைகளைப் படிக்க வைக்க முடிவதில்லை. அவர்களை உருவாக்க வசதிகளைப் பெறாமல் புறக்கணிக்கப்படுகின்றனர். யாராவது நல்ல ஆடை உடுத்திப் பார்க்க முடியவில்லை. இதைப்பற்றி நினைப்பதால் பயன்? அவர்கள் வாழப் பிறந்தவர்கள் அல்ல போராடப் பிறந்தவர்கள். அவர்கள் நிச்சயமாகப் போராடத்தான் போகிறார்கள். வெற்றி அவர்கள் பக்கத்தில் நிச்சயம் ஒரு நாள் கிடைக்காமல் போகாது. இந்தத் துன்பத்தை எல்லாம் மறக்க ஒரே வழி. காதல் தான் காதல் ஒரு போதை என்று நினைக்கிறேன். யாராவது ஒருத்தியைக் கைப்பிடித்தால் அவளைச் சுற்றி ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். பிறகு அந்தக் குடிசைப் பக்கமே போக வேண்டியிருக்காது. - 'குப்பத்திற்குச் சென்றேன்' என்று உஷாவிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. "தெரியும்; போகாமல் இருக்கமாட்டீர்கள்; ஆறு நாள் ஆபீசில் கிடக்கிறீர்; ஒரு நாள் ஒரு மாற்றம்" மறுபடியும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னாள். "இந்த ஆபீசு சூழ்நிலையில் பழகிவிட்ட உங்களுக்கு அது ஒரு பெரிய மாற்றம்" என்றாள். என்னை அங்கிருக்கும் பைல்கள் முறைத்துப் பார்ப்பது போல இருந்தன. "நான் இந்த வாரம் கட்டாயம் எதிர்பார்த்தேன்" எனறாள. "உன்னை உங்கள் வீட்டில் சந்திக்க விரும்பவில்லை” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/122&oldid=772834" இலிருந்து மீள்விக்கப்பட்டது