பக்கம்:நனவோட்டங்கள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 121 "என் தந்தை எதிர்பார்த்தார்" என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த மாஜி இன்ஸ்பெக்டர் என்னை எதிர்பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. 'குற்றவாளியைச் சிறைப்படுத்த விரும்புகிறார் என்று பட்டது. அவர் வாழ்க்கை என்னை மிகவும் கவர்ந்திருந்தது. 'தப்பிப் பிறந்தவர்' என்று சொல்வார்களே அதில் அவரும் ஒருவர். லஞ்சம் வாங்காத அதிகாரி, மக்கள் நோயை நம்பி வாழாத மருத்துவர், வழக்குகள் குறைய வேண்டும் என்று நினைக்கிற வக்கீல்கள், மக்களும் அறிவாளிகள் என்று நினைக்கிற அரசியல் வாதிகள், உரிமை கொடுத்து வாழ நினைக்கும் தம்பதிகள், மகள் திருமணத்தைத் தள்ளிப் போடலாம் என்று நினைக்கும் தாய்மார்கள், குழந்தைகள் இல்லாமல் இல்லறம் நடத்திச் சமூகத்திற்குத் தொண்டு செய்ய முடியும் என்று நம்புகின்ற ஆண் பெண்கள், கான்வென்டில் படிப்பது நம் தாய்மொழியையும் நம் தாய் நாட்டையும் நம் பண்பாட்டையும் மறப்பது என்று நினைக்கும் பெற்றோர்கள், தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டிப் பணம் சேர்க்கக்கூடாது என்று நினைக்கும் முதலாளிகள், அரசியல் தனிப்பட்டவரின் நன்மைக்காக அல்ல, சமுதாயத்தின் வளர்ச்சிக்கு என்று நினைக்கும் கட்சிக்காரர்கள் இவர்கள் எல்லாம் தப்பிப் பிறந்தவர்கள் என்பது என் எண்ணம். அவர் மகளுக்கு அதுதான் உஷாவின் தங்கைக்கு மணமாகாத குறை அவருக்கு இருந்தது என்பது எனக்கு நன்றாகப்பட்டது. அவர் லஞ்சம் வாங்கி இருந்தால் இந்த வேதனை அந்தக் குடும்பத்தை வந்து அடைந்திருக்காது. யோக்கியமாக வாழ்ந்தது அவர் தனிப்பட்ட வாழ்வில் செய்த ஒரு தவறு. சமூகப் பார்வையில் பார்க்கும்பொழுது அதுதான் லட்சியம், லட்சிய மாந்தர்கள் சமூகப் பார்வை யில் போற்றப்படுகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் தூற்றப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/123&oldid=772836" இலிருந்து மீள்விக்கப்பட்டது