பக்கம்:நனவோட்டங்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ரா. சீனிவாசன் படுகிறார்கள். லட்சியத்துக்கும், வாழ்க்கை உண்மைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். அவர் ஒரு லட்சிய மனிதராகவே வாழ்ந்து விட்டார். - அவள் கேட்ட கேள்வியை நானும் திருப்பிக் கேட்டேன். "நீ ஞாயிற்றுக் கிழமை எந்தப் படம் பார்க்கப் போயிருந்தாய்?" இப்படித்தான் கேட்க முடியும் ஒரு பெண்ணைப் பார்த்து. நீ எங்கே போயிருந்தாய் என்று எப்படிக் கேட்க முடியும்? எந்தப்படம் பார்க்கப் போயிருந்தாய் என்று கேட்பது தான் நியாயமான கேள்வியாகப்பட்டது. இப்பொழுது யாரிடமாவது பேசுவதாக இருந்தால் இதைத்தான் கேட்க முடிகிறது. அதிலும் பெண்ணுக்குப் பிடித்த கேள்வி இதுதான் என்பதும் என் அனுபவமாக இருந்தது. அதற்கப்புறம் அவர்கள் சொல்லுவார்கள் தான் படம் பார்க்கப் போன கதையை, டிக்கெட்டு வாங்கு வதற்குள் பட்ட பாட்டிலிருந்து வீடு வந்து சேர்ந்த கதை வரைக்கும் சொல்லி முடிப்பார்கள். இதற்கு முன்னால் உஷா என்னிடம் சொல்லி இருக்கிறாள். ஒரு பகல் காட்சி பார்த்து விட்டு வீடு திரும்பிய கதையை, "அன்று பொழுது போகவில்லை. என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரு தாய்க்கு ஒரு மகள்' என்ற கதை அது. அந்த மாதிரி இதுவரை வந்ததே இல்லை அவளைச் செல்லமாக வளர்த்தாள் பிறகு எப்படியோ கதை முடிந்தது. அதைப் பார்த்து விட்டு பஸ் நிலையத்திற்கு வந்தேன். பத்திரகாளி படத்தில் ஒரு ஆள் பயங்கரமான உருவம் அதே போல இருந்தான் அவன். அவன் பின்னாலேயே நடந்து வந்தான். அப்பொழுதுதான் கணவன் எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்தேன். பயிருக்கு வேலிபோல் பெண்ணுக்குக் கணவன் என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/124&oldid=772837" இலிருந்து மீள்விக்கப்பட்டது