பக்கம்:நனவோட்டங்கள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 123 உணர்ந்தேன். அவன் என்ன நினைத்தானோ தெரிய வில்லை எனக்கே ஒரு பயமாகிவிட்டது. நான் ஏறுகிற பஸ்ஸிலேயே அவனும் ஏறினாள். எனக்கு இன்னும் பயமாகிவிட்டது. பஸ் நகர்ந்தது. பெட்ரோல் பங்குக்கு ஒரு டிக்கட் கேட்டு வாங்கினேன். அவனும் அதே இடத்திற்கு வாங்கினான். நான் எங்கள் வீட்டுக்கு என்று இடம் சொல்லி இருந்தால் கட்டாயம் தொடர்ந்து இருப்பான். வேண்டுமென்றே இந்தப் பாதி துரத்திற்கு வாங்கிக் கொண்டேன். அவசரப்பட்டு அவன் முன் இறங்கி விட்டான். நான் இறங்குவது போல அசைந்தேன் அவ்வளவுதான் தப்பித்துக் கொண்டேன்' இந்த அனுபவத்தை அவள் என்னிடம் சொல்லியிருந்தாள். இதைப் போல ஏதாவது அனுபவத்தைக் கட்டாயம் சொல்லித்தீர்வாள் என்பதற்காககத் தான் "நீ எந்தப் படத்தைப் பார்த்தாய்?" என்று கேட்டேன். "வீட்டில் பழைய படங்களை எல்லாம் எடுத்து வைத்தேன். அவற்றை ஏறகட்டி வைத்தேன்" என்றாள். அதாவது கலியாணப் படங்களை எடுத்துப் பத்திரப் படுத்தினேன் என்று சொன்னாள். அவள் வீட்டுக்கு முதல் முதல் சென்ற போது அவள் திருமண அனுபவ நிகழ்ச்சிகள் அடங்கிய போட்டோ ஆல்பத்தை என் முன் எடுத்துவைத்தாள். அவள் அம்மாவுக்கும் அதைக் காட்டுவதில் ரொம்பவும் திருப்தி, குழந்தை இருக்கிற வீட்டில் அந்தக் குழந்தையை நம்மிடம் எடுத்துக் கொடுக்க முன் வருவது போலக் கலியாணமான புதிதில் இதைக் காட்டுவது வழக்கம் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். இங்கே அவள் தன் கதையின் ஆரம்பத்தை அந்தப் படத்தைக் கொண்டு சொல்லத் தொடங்கினாள். ஆரம்ப பாடத்தைப் படங்கள் கொண்டு தானே சின்ன வயதில் கற்றுக் கொடுக்கிறார்கள். அந்த நினைவு என்னுள் ஒடத் தொடங்கியது. அவள் திருமணக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/125&oldid=772838" இலிருந்து மீள்விக்கப்பட்டது