பக்கம்:நனவோட்டங்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ல் ரா. சீனிவாசன் கோலத்தில் மிக அழகாக இருந்தாள். அவள் நாணம் மிக்க பார்வை கலியாணத்துக்காகவே அமைந்து விட்டதுபோல இருந்தது. அவன் தலைப்பாகை கட்டியிருந்தான். நெற்றியில் ஏதோ பட்டமாம்; அதைக் கட்டி இருந்தார்கள். அவன் அன்று ராஜாவைப் போல் இருந்தான். "ஒரு நாள் இராஜா" என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். "பொருத்தமான ஜோடி" என்று பட்டது. நான் என்னைப் பற்றி நினைத்துக் கொண்டேன். நானும் ஒரு நாள் ராஜாவாக ஆகாமல் போகமாட்டேன் என்று நினைக்கத் தொடங்கினேன். நிச்சயமாகப் புரட்சி என் ராணியாக இருந்து போட்டோ எடுத்துக் கொள்ள முடியாது. அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டாது. உஷா முடியாது. அவள் மற்றொருவனின் மனைவி. "நீ விவாகரத்து செய்து கொள்ளலாமே" என்று நான் சொன்னது நினைவுக்கு வந்தது. "அதனால் அவன் கெட்டுத்தான் தொலைவான்' என்று அழகாகச் சொன்னாள். பெண் ஏன் கணவனை விட்டுப் பிரிவது இல்லை என்பது அப்பொழுது தான் விளங்கியது. அவனோடு தான் இருக்க வேண்டுமென்பது அடிப்படை அல்ல; அவன் தனியாக விடப்படக் கூடாது. என்பது தான் அவள் அழகிய தொடர் விளக்கியது. அவள் அவன் மீது அக்கரை காட்டினாள் என்பது மட்டும் எனக்கு விளங்கியது. முன்னால் ஒவியர் சொன்னது நினைவுக்கு வந்தது. சீர்திருத்தம், சீரமைப்பு, அடியோடு மாற்றம் இந்த மூன்று நிலைகளில் அவள் முதற்படியில் நின்றாள் என்பது தெரிந்தது. அவசரப்பட்டு விவாகரத்து செய்யக் கூடாது என்றாள்.'"நான் அவனை வெறுத்தால் தானே விவாகரத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/126&oldid=772839" இலிருந்து மீள்விக்கப்பட்டது