பக்கம்:நனவோட்டங்கள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 ரா. சீனிவாசன் சில பேர் செத்த பிறகும் படம் எடுப்பதைப் பார்த்தி ருக்கிறேன். வாழும் போது அவர்களைப் பற்றி நினைவுகள் வராததால்தான் என்பதை எண்ணிப் பார்க்க முடிந்தது. வித விதமாக அந்தப் படங்கள் எடுக்கப் பட்டிருந்தன. மணச் சடங்கு ஒவ்வொன்றுக்கும் முக்கியத் துவம் தரப்பட்டு இருந்தன. ஐயர் மிக அழகாக விழுந்திருந்தார். அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்துப் பழக்கம் என நினைக்கிறேன். எல்லாம் கண்ணியமாக இருந்தன. அவர்கள் புறத் தோற்றத்தைத் தான் அவை காட்டின. அவன் அவளைப் பற்றி என்ன நினைக்கிறான் உண்மையில் அன்பால் பிணைந்தார்களா என்பதை அவை காட்டவில்லை. அவள் மட்டும் தன் நாணத்தால் அவனுக்காக அடங்கிக் கழுத்தை வளைத்துக் கொடுப்பதைப் பார்க்க முடிந்தது. அப்படங்கள் சிலவற்றைப் பெரிதாக மாட்டிச் சுவரை அழகு படுத்தினாள். சுவருக்கு அப்படங்கள் அவசியம் போல் பட்டன. விளம்பரப் பலகைகளாக விளங்கின என்று அவள் வேடிக்கையாகச் சொல்லி இருக்கிறாள். நான் அப்படி நினைக்கவில்லை. அவை இனிய நினைவுகளாக அழகு செய்தன என்றுதான் கருதுகிறேன். அந்தப் படங்கள் கண்ணியமான தோற்றத்தோடு விளங்கின. திரைப் படத்தில் மட்டும் ஏதோ படங்கள் காட்டுகிறார்களே ஏன்? தெரியவில்லை. வாழ்க்கை என்பது அது தான் என்பது விளம்பரம். அற்புதமான படங்களை வெளியே விளம்பரப்படுத்துகிறார்கள். வெளி விளம்பரங்கள் இருக்கட்டும் உள் செய்திகளும் அப்படித் தானே இருக்கின்றன. அதற்காகவே இளைஞர்கள் சென்று படம் பார்க்கிறார்கள். சில சமயம் நானும் அந்தக் கவர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறேன். “அடல்ட்ஸ் ஒன்லி"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/128&oldid=772841" இலிருந்து மீள்விக்கப்பட்டது