பக்கம்:நனவோட்டங்கள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 127 படம் பார்க்கச் சென்றது உண்டு. அங்கே என்ன இருக்கிறது எல்லாம் சென்சார் போர்டு பார்த்துக் கழித்துவிட்ட படங்கள் தானே. இந்தவகையில் நாடகம் என் மதிப்பில் உயர் இடம் பெறுகிறது. அங்கே குறிப்புதான் இடம் பெறும் கலைக்கே இந்த நுட்பம் அவசியம். பல்லாயிரக் கணக்கான பேர் பார்க்கும் படங்கள். அங்கே நுட்பமாகக் காட்டினால் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. நம் நாட்டுப் ப்டங்கள் எவ்வளவோ மேல். ஆங்கிலப் படங்கள் ஒரு உணர்ச்சியை வைத்தை முழுப் படத்தை எடுத்துக் காட்டி விடுகிறார்கள். அதற்காகப் பலர் அதைப் பார்க்கப் போகிறார்கள். வற்புறுத்தல் (rape) என்பதே படத்தின் தலைப்பாக இருக்கும். அதையே முழுப் படமாகவும் காட்டி விடுகிறார்கள். அதைப் பார்க்கக் காரில் செல்கிறவர்கள் தான் போகிறார்கள். "house full என்று பலகை மாட்டி விடுகிறார்கள். 'கலைகள் மெத்த வளருது மேற்கே' என்றுதான் நான் நினைப்பது உண்டு. நம் தமிழ்ப் படங்களில் கத்திச் சண்டைகள் குறைந்து வருகின்றன. வாழ்க்கைச் சித்திரங்கள் மிகுதியாக இடம் பெறுகின்றன. இது வரவேற்கத்தக்க முயற்சி என்றுதான் கூறமுடியும். வீரத்தைக் காட்டுவதற்குக் கத்திச் சண்டை பயன்படுத்தப்பட்டது. அது அந்த மாதிரி பழைய காலத்துச் சண்டைக்கு அவசியம் தான். வாழ்க்கைச் சித்திரத்துக்குத் தேவைப்படாது என்று நினைக்கிறேன். கீழ் நிலையில் இன்னும் வீரமாகத்தான் பல பேர் இருக்கிறார்கள். எதற்கும் துணிந்து விடுகிறார்கள். எந்தத் தொழிலாளியும் விட்டுக் கொடுக்க மாட்டான். அவன் சம அந்தஸ்து சம உரிமை' என்ற போராட்டத்தில் கால் எடுத்து வைத்து விட்டான். ஆனால் இன்னும் கிராமங்களில் தொழில் அடிமை இருக்கத்தான் செய்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/129&oldid=772842" இலிருந்து மீள்விக்கப்பட்டது