பக்கம்:நனவோட்டங்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ( ரா. சீனிவாசன் காலம் மாறிக் கொண்டு இருக்கிறது. அவர்களும் எழுச்சி பெறுகிறார்கள்; பெற்றுக் கொண்டு வருகிறார்கள். இந்த நடுத்தர வர்க்கத்தில் தான்காக்காய் பிடித்தல்' என்ற கெட்ட பழக்கம் இன்னும் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. இது வெள்ளையன் கற்றுக் கொடுத்த பாடம் என்று நினைக்கிறேன். அவனிடம் நல்லவிதமாக நடந்து காட்டினால் அவன் உடனே பதவி உயர்வு கொடுத்தான். அதே பழக்கம் பலருக்கு இப்பொழுது படிந்து விட்டது. அதெல்லாம் எனக்குத்தெரியவில்லை. நானும் எப்படியோ நாலு பேர் மதிக்கவே தொழில் செய்து வருகிறேன். எனக்கு என் அதிகாரியைக் கூடத் தேவையில்லாமல் பார்ப்பது இல்லை. எல்லாம் எழுத்து மூலமாகத் தான் தொடர்பு கொள்வேன். அதனால்தான் என் சுயமரியாதை யைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என நினைக்கிறேன். "அவன் கெட்டுப் போனால் உனக்கு என்ன?" அவள் மீண்டும் சொன்னாள் "மண வாழ்வே மனிதனைக் காப்பாற்றுவதற்குத் தான். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு இல்லை என்றால் அவன்காட்டு மிராண்டியாகிவிடுவான். அவனைக் கட்டுப்படுத்த முடியாது. ஆடவர் திருந்தி வாழ்வதே மண வாழ்வில்தான்” என்று அவள் தெளிவாகக் கூறினாள். திரு.வி.க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் கவனத்திற்கு வந்தது. அதை அவள் சொற்களில் நேரில் காண முடிந்தது. "பின் ஏன் அவன் உன்னை வெறுத்து ஒதுக்குகிறான்?" "அந்தக் கட்டுப்பாட்டை அவர் விரும்பவில்லை. சில மாடுகள் கையிலிருந்து கயிற்றையும் அறுத்துக் கொண்டு ஒடுவதைப் பார்த்தது இல்லையா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/130&oldid=772844" இலிருந்து மீள்விக்கப்பட்டது