பக்கம்:நனவோட்டங்கள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ( ரா. சீனிவாசன் போராட்டத்தை, என்னைப் பிடிக்காத ஒருவரின் முகத்தை நான் எப்படிப் பார்க்க முடியும்? எவ்வளவு த்ொல்லை தெரியுமா? வீட்டுக்கு வருகிறவர்கள் எல்லாம் என்ன கேட்கிறார்கள் எப்பம்மா நீ மாமியார் வீட்டிற்குப் போகப் போகிறாய் என்று கேட்கிறார்கள். அல்லது ஏனம்மா அவர் வர்ரதே இல்லையா சண்டையா என்ன? நான் எப்படிச் சொல்ல முடியும். எனக்கும் அவருக்கும் மனம் ஒத்துப் போகவில்லை என்று. எனக்கு என்று ஒர் இதயம் இருக்கிறது என்பதை இந்த வீட்டில் உள்ளவர்கள் உணர்வதில்லை. ஒன்று மனதுவிட்டுச் சொல்லுகிறேன். தெருவில் யாராவது ஜோடியாக இரண்டு பேர் போனால் என் உள்ளத்தில் எழும் குமுறலை நான் எப்படிச் சொல்ல முடியும். திருக்குறளைப் புரட்டிப் படிப்பேன். அதில் ஏதாவது எனக்கு ஆறுதல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். மனை மாட்சியைப் பற்றி அவர் பேசுகிறாரே தவிர, மனையோன் மாட்சியைப் பற்றி அவர் பேசியதாகத் தெரியவில்லை. அவன் திருந்துவதற்கு என்ன சொல்லியிருக்கிறார். கட்டிய மனைவியை வைத்து வாழ வேண்டும் என்று எங்கேயாவது சொல்லியிருக்கிறரா? கூடா ஒழுக்கம் கூடாது என்றுதான் பேசுகிறார். அதைக்கூட நான் தடுக்க வில்லையே; எப்படி யாவது ஒழிந்து போகிறான். நான் போராடுவது எல்லாம் இந்தச் சமூகம் எனக்கு அளிக்க வேண்டிய கவுரவத்துக்குத் தான், என்னைக் கண்டு ஒரு சிலர் இரக்கம் காட்டு கிறார்கள். எல்லாம் போகப் போகச் சரியாகப் போய்விடும் என்று ஆறுதல் கூறுகிறார்கள். அவ்வளவுதான். எதைத் தாங்கினாலும் தாங்கிக் கொள்ளலாம். பிறர் நம்மைக் கண்டு இரக்கம் காட்டுவது எனக்குப் பிடிக்க வில்லை. அவன் முகத்தில் விழிக்கக் கூடாது என்ற எண்ணம் இப்பொழுது அதிகமாகிக் கொண்டு வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/132&oldid=772846" இலிருந்து மீள்விக்கப்பட்டது