பக்கம்:நனவோட்டங்கள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 6 131 நீங்கள் குப்பத்துக்குச் செல்கிறீர்கள். அங்கே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று உங்களால் கூற முடிந்ததா? மொத்தமாகப் பார்க்கும்பொழுது அவர்களைச் சுரண்டப் பட்டவர்கள் என்று கூறி விட்டீர்கள். அவர்களுடைய நல்ல பண்புகளை எல்லாம் கூட இந்த மேல் நிலை மட்டத்தார் சுரண்டிவிட்டார்கள் என்றுதான் கூற முடியும். வாழ்க்கை வசதிகளை அவர்களுக்கு மறுத்து விட்டனர். அதனால் அங்கே எப்பொழுதும் ஒரு அமைதியின்மையைக் காண்கிறீர்கள். அதே நிலைதான்; நான் சுரண்டப்பட்டவள்; என் நலம் எல்லாம் அவனால் கெட்டு விட்டது; அப்பாவிடம் பெற்ற பணத்தை எல்லாம் சுரண்டி எங்கள் குடும்பத்தை நாசப்படுத்தி விட்டான். அவனைச் சீர்திருத்த முயன்றேன்; அதில் தோல்வியைத்தான் கண்டேன். என் மனநிலையைச் சீர் அமைப்புச் செய்து கொள்வதற்குத்தான் இந்தப் படங் களைக் களைய வேண்டியதாயிற்று. அதற்காகத்தான் இந்த ஞாயிற்றுக் கிழமையை முழுவதும் பயன்படுத்தினேன்" என்று கூறி முடித்தான். அவள் பேசியது ஒரு கட்டுரையைப் படிப்பது போல இருந்தது. - "ஒவ்வொரு படத்தையும் ஒரு தாள் போட்டுக் கட்டி வைத்தேன். அதோ அந்த மூலையில் உறங்கிக் கிடக்கின்றன.” அவள் பழைய நினைவுகளை மேலும் தட்டி எழுப்ப நினைக்கவில்லை. "அப்பொழுது உன் எதிர்காலம்?" "அதுதான் தெரியவில்லை.” "மணமாகாத பெண்ணுக்கு நம்பிக்கை இருக்கிறது அவள் எதிர்காலத்தைப் பற்றி; விதவைக்கு இறந்த காலம் அவளுக்குப் பழங்கதையாகி விடுகிறது. நான் இரண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/133&oldid=772847" இலிருந்து மீள்விக்கப்பட்டது