பக்கம்:நனவோட்டங்கள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 : ரா. சீனிவாசன். கெட்ட நிலையில் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்" என்றாள். இந்தப் பேச்செல்லாம் நான் ஆபீசில் பேசியது இல்லை. சில நாட்களில் அவள் வீட்டுக்குச் சென்றது உண்டு. அப்பொழுது வேறு பேச முடியாத காரணத்தால் அவள் உள்ளக் குமுறல்களைக் கேட்க வாய்ப்புகள் ஏற்பட்டன. * * ஒன்று ஏழையாகப் பிறக்க வேண்டும். அல்லது பணக்காரக் குடும்பத்தில் வசதி மிக்க வாழ்வு பெற வேண்டும். இரண்டும் கெட்ட மத்தியதர வாழ்க்கையில் தான் இந்த இக்கட்டான நிலை என்றாள். இதைப் போலப் பலர் பேசக் கேட்டிருக்கிறேன். அவள் சொல்லியதில் எந்தப் புதுமையும் காணப்பட வில்லை. பிறகுதான் தெரிந்தது அதற்கு அர்த்தம் இருந்தது. கட்டுப்பாடுகள் எல்லாம் இந்த மத்தியநிலைக் குடும்பங் களுக்குத்தான். அவர் காட்டிய குப்பத்தில் இப்படி யாரும் வாழா வெட்டியாக இருந்ததில்லை. அவள் தனக்கு வேண்டிய மற்றொருவனை உடனே தேர்ந்து எடுத்துக் கொள்வாள். அவனோடு குடித்தனம் செய்வாள். துணிந்து அவனைத் தந்தையாக்கி விடுவாள்; இரண்டொரு குழந்தை களுக்கு, அதைத்தான் அவள் சுட்டிக் காட்டினாள்; மேல் நிலையில் துணிந்து அவனைத் துறப்பாள் சட்டப் பின்னணியில், உடனே விளம்பரம் தந்து மற்றொருவனை மணப்பாள். பாவம் உஷா, அவள் குடும்பத்தைப் பற்றி எண்ணுகிறாள். அதைவிட மற்றொன்று சொன்னதுதான் எனக்கு இன்னும் வேதனையைத் தருகிறது. it to யார் என்னைத் துணிந்து மணம் செய்து கொள்வார்கள்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/134&oldid=772848" இலிருந்து மீள்விக்கப்பட்டது