பக்கம்:நனவோட்டங்கள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 133 இந்தக் கேள்விக்கும் அவள் கேட்ட கேள்விக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. "நீ ஒரு விதவையை மணப்பாயா? என்னைக் கலியாணம் செய்து கொள்ளத் துணிவு இருக்கிறதா?' என்று கேட்டாள். அது அநாகரிகமாகப் பட்டது. இது நாகரிகமாகப் பட்டது. அவள் பொதுவாகவே இந்தக் கேள்வியை எழுப்பினாள். இந்தப் பொதுக் கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியவில்லை. யாருமே சொல்ல முடியாது என்றுதான் நினைக்கிறேன். கண்ணம்மாவின் வாழ்க்கைக்கும் உஷாவின் வாழ்க்கைக்கும் நிரம்ப வித்தியாசம் இருக்கிறது. அவ்ன் நினைத்தால் யாரையும் துணிந்து தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால் அவளை யார் வேண்டுமானாலும் எப்படிச் சொல்வது வைப்பாட்டியாக வைத்துக் கொள்வான்; அது அவளுக்குப் போதும். அந்த நிலையிலும் அவள் கவுரவம் இழக்க மாட்டாள். "அவள் என்ன செய்வாள்; கணவன் செத்து விட்டான். இன்னாரை வைத்துக் கொண்டிருக்கிறான் என்று முடித்து விடுவார்கள். அவளுக்குப் பழையபடி எல்லா மதிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவள் கவுரவத்துக்குத் தன் வாழ்வை இழக்க வேண்டியது இல்லை. - - உஷா? கவுரவத்துக்காக எல்லாவற்றையும் இழக்க வேண்டியுள்ளது. அதுவும் இன்ஸ்பெக்டர் மகள்; கவுரவ மாக வாழ்ந்த குடும்பம்; அப்பாவின் கண்காணிப்பிலிருந்து அவள் தப்ப முடியாது. மற்றும் அவள் சொல்வாள், "நான் மணமாவதற்கு முன் வாய்ப்புக் கிடைத்திருந்தால் தவறி இருப்பேன்; இப்பொழுது அந்த எண்ணமே. உண்டாவது இல்லை. தவற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/135&oldid=772849" இலிருந்து மீள்விக்கப்பட்டது