பக்கம்:நனவோட்டங்கள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ல் ரா. சீனிவாசன் இந்தச் சமூதாயமே உரிமை கொடுத்தாலும் என்னால் முடியாது” என்கிறாள். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மனவிலங்கு எத்தகையது என்பதை அப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன், எனக்கு மானம்தான் பெரிது என்று வற்புறுத்திக் கூறுகிறாள். அவள் என்னைப்பார்க்கச் சொன்ன படத்தோடு அவளை ஒப்பிட்டுப்பார்க்கிறேன். பாலச்சந்தர் சமாளித்துக் கொண்டார். அவர்கள் படத்தில் அந்தக் கதை ஒரு வகையாக முடிவு பெறுவதற்கு ஒரு குழந்தை இருந்தது. அவள் வாழ்வதற்கு ஒரு பிடிப்பைத் தந்தது அந்தக் குழந்தை. எத்தனையோ பெண்கள் மன அமைதியோடு பழைய நினைவுகளில் வாழந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறேன். அவர்கள் தாய்மை பெண்மையைக் காப்பாற்றிவிடுகிறது. அக் குழந்தைகளின் நன்னடத்தையில் கவனம் செலுத்து வதால் அவர்கள் நல்ல பண்பு உடையவர்களாக மாறி விடுகிறார்கள். உஷாவுக்கும் ஒரு குழந்தை இருந்தால் உண்மையாக அவள் வாழ்க்கை ஒளிபெற்றுத்தான் திகழும். அவள் மார்பில் தவழ அது எவ்வளவோ ஆறுதலாக இருக்கும். அவளுக்கு ஒரு லட்சியம் கிடைத்துவிடும். சின்ன ஆசைகள் அவளைத் தின்ன வராது. அவள் அதை அணைத்து முத்தம் இடுவாள். அந்தச் சத்தம் அவளுக்கு இனிய நாதமாக இருக்கும். அதில் இந்த உலகத்தையே மறப்பாள். அந்த பாக்கியத்தை அவள் பெறவில்லை. அதற்குள்ளாகவே அவள் ஏறி இருந்த கிளை முறிந்துவிட்டது. அது அவனைத் தாங்க மறுத்துவிட்டது. அவளுக்குக் குழந்தை இல்லாததும் நல்லதுதானே. அது அவளுக்கு ஒரு கட்டுப்பாடுதானே என்று நினைப்பேன். "உஷா உனக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தால்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/136&oldid=772850" இலிருந்து மீள்விக்கப்பட்டது