பக்கம்:நனவோட்டங்கள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 135 “எனக்கு அந்த ஆசை தோன்றவில்லை. அந்தக் குழந்தை ஒரு பெண்ணாக இருந்தால் அதன் எதிர்காலம் என்னைப் போல் அமைந்து விட்டால்” "பையன்தான் பிறப்பான்” என்றேன். "அவரைப் போல் மாறிவிட்டால்" அவள் குழப்பத்தை மாற்ற முடியாது. சில சமயம் குழப்பமே நல்லது என்றும் படுகிறது. அதுவாவது அவனை இழுத்துப் பிடித்துக் கொண்டு இருக்கும் என்று நினைக்கிறேன். சில சமயம் என்ன பேசுவது என்பது தெரியாது. அவள் தங்கை காப்பி கொண்டு வந்து கொடுப்பாள். நான் ஆபீசர் என்பதால் அவளும் கொஞ்சம் மரியாதை காட்டினாள். நான் அவர்கள் வீட்டுக்குப் போகும் பொழுதெல்லாம் பொதுவாக இன்ஸ்பெக்டர் வெளியே போய்விடுவார். நாகரிகம் தெரிந்த மனிதர் என்று நினைத்துக் கொள்வேன். "ஒன்றே ஒன்றை நான் வெறுக்கிறேன்" என்றாள் உஷா. "அம்மா என்னைச் சுற்றிக் கொண்டே இருப்பாள். நான் யாரிடமும் பழக விடமாட்டாள். உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால் வந்து எப்படியும் கலந்து கொள்வாள். சில சமயம் நான் உங்களை நினைப்பேன். ஏதாவது பேச வேண்டும் என்று தோன்றும். ஆனால் பேச முடிவது இல்லை. வேண்டாத ஆபீஸ் விஷயங்களைத்தான் பேச முடியும். அப்பொழுது நிரம்ப சலிப்பு ஏற்பட்டுவிடும்." "சில சமயம் அதற்காகவாவது அவர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பேன். கணவன் ஒருவர் இருந்தால் எவ்வளவு தைரியமாக உங்களை வர வேற்க முடியும். அந்த பாக்கியத்தை நான் செய்யவில்லை." என்று வாய்விட்டுக் கூறி விடுவாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/137&oldid=772851" இலிருந்து மீள்விக்கப்பட்டது