பக்கம்:நனவோட்டங்கள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ரா. சீனிவாசன் "பெண்கள் கணவன் பேரைச் சேர்த்துத் தம் பெயர் எழுதிக் கொள்கிறார்கள். நான் அதை விரும்பவில்லை. அவரே என்னோடு ஒட்டாதபோது நான் ஏன் அவர் பெயரை ஒட்டிக்கொள்ளவேண்டும். துணை இல்லாமல் வாழ முடியாது என்பதற்குத்தானே இப்படிப் பெயரை ஒட்டிக் கொள்கிறார்கள்” என்று கேட்டாள். "இல்லை. அவன் தன்னைவிட்டு எப்பொழுதும் விலகக் கூடாது என்பதற்காகத் தான்" என்றேன். அவள் சிரித்தாள். அவளுக்கும் ஏனோ தெரியவில்லை. என்னிடம் பேசித் தன் துன்பத்தைக் கொட்ட நினைத்தாள். அவளுடைய மென்மையான உணர்வுகளைப் புரிந்து கொள்ள அவளுக்கு நான்தான் அகப்பட்டேன். எவ்வளவோ அடக்கி வைப்பாள்; முடியாது. ஏதாவது சொல்லித் தீர்ப்பாள். நானும் பொறுமையாகக் கேட்பேன். அதில் எனக்கும் ஒரு திருப்தி. நாம் பிறர் சொல்லக் கேட்பது ஒரு கலை; அது அவசியம்; பிறர் சுமையைக் குறைக்க முடிகிறது. அது ஒரு நியாயமான தொண்டு என்றே நினைப்பது உண்டு. ஆனால் உஷாவிடம் அப்படி என்று நினைக்க முடிவது இல்லை. அவள் வாழ்வில் எனக்கும் ப்ங்கு இருப்பது போன்ற உணர்வு எழுவது உண்டு. அதனால் தான் நான் அவள் பேசுவதைப் பொறுமையாகக் கேட்கிறேன் என்று நினைக்கிறேன். இப்படித்தான் நினைத்துப் பழகினேன் அன்று யாருமே வீட்டில் இல்லை. நான் அப்படி எதிர்பார்க்க வில்லை. அவள் அப்பா பென்ஷன் வாங்க வெளியே சென் றிருந்தார். அம்மா, தங்கை எங்கேயோ சென்றிருந்தார்கள். ஏன் அந்தத் தனிமை கிடைத்தது என்று தெரியவில்லை. அன்று நாங்கள் கணவன் மனைவியராக ஆகிவிட்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/138&oldid=772852" இலிருந்து மீள்விக்கப்பட்டது