பக்கம்:நனவோட்டங்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 137 சன்னல் திறந்து இருந்தது. வெளியே மாலை நேரக்காற்று மயக்கத்தை உண்டாக்கி விட்டது. அவள் ஆபீசு குமாஸ்தாவாக அன்று காணப்படவில்லை. கோயில் சிலையின் சிற்பமாக அவள் எனக்குக் காட்சித் தந்தாள். அது என் மானசீகக் காட்சியாக நின்றது. - நான் அவள் தங்கையை மணக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறவில்லை. அவள் அன்று அவசரப்பட்டு விட்டாள் என்று நினைக்கிறேன். அவள் பதறினாள் அவளும் ஒரு பெண்தான் என்பதை அன்று வெளிப்படுத்தி விட்டாள். - எனக்கு ஏற்பட்ட அனுபவம் தொடர்கதையாக மாறி விட்டது. அவள் என்னைப் பொறுத்தவரை ஒரு தொடர் கதையானாள். என் மனச் சான்று என்னை உறுத்தவில்லை. இப்படித்தான் லஞ்ச ஊழல்களே ஏற்படுகிறது என்பதை எண்ணிப் பார்க்க முடிந்தது. ஒருமுறை சுவை காண்பவர் அதைவிட முடிவதில்லை. நான் உத்தமனாக இருந்து வந்தேன் என்ற ஆணவம் இருந்து வந்தது. இராமாயணக் கதையில் இராமனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் ஏக பத்தினி விரதன் என்று காவியங்கள் பேசின. நானும் அப்படித்தான் வாழ்வேன் என்று நம்பினேன். உஷாவின் தங்கை எனக்கு வாய்த்திருந்தால் அப்படித்தான் என் வாழ்வு அமைந் திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உஷாவின் வாழ்வில் நான் ஒரு புதிய திருப்பத்தை உண்டு பண்ணி விட்டேன் என்று நினைக்கிறேன். இதற்கு முன் அவளும் சொல்லி இருந்தாள். அந்த மடையன் நினைப்பது போல் நான் தவறமாட்டேன் என்று அகம் பாவம் பேசினாள். நான் கல் நெஞ்சத்தைக் கண்டு உண்மையில் வியந்தேன். அதைக்கொண்டுதான் கற்பு என்பதன் பொருளை அறிந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/139&oldid=772853" இலிருந்து மீள்விக்கப்பட்டது