பக்கம்:நனவோட்டங்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ரா. சீனிவாசன் 'நான் என்ற எண்ணத்தையே விட்டு ஒழிக்க வேண்டும் என்று சில வேதாந்திகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை விடக் கூடிய நிலையில் நான் இல்லை. நான் என்பதைச் சுற்றித்தான் இந்த உலகமே சுழல்கிறது. உலகம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த நான் என்பதும். இரண்டும் பிரிக்க முடியாத சொற்கள். இது தத்துவம் அல்ல; உண்மை. அந்த நான் என்பதற்கு மூல காரணமாக இருந்த என் அம்மாவைத் தாய் என்று சொல்லுவதற்கு எனக்கும் பிடிப்பது இல்லை. அம்மா என்றுதான் குழந்தையிலிருந்து அழைத்திருக்கிறேன். அந்தச் சொல்லை மாற்றிக் கொள்ள எனக்குப் பிடிக்கவில்லை. உங்களுக்காக நான் ஒரு சில சமயம் கைதவறித் தாய் என்று எழுதிவிடுகிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவள் அம்மா தான் அம்மா தான் வேறு சொல்லத் தெரியாது. அவளுக்கு நான் கலியாணம் ஆனவனாக ஆக வேண்டும் அதுதான் ஆசை, லட்சியம்; உயிர்; எண்ணம்; செயல்; எல்லாம். எனக்கு இல்லாத ஆசை அவளுக்கு ஏன்? சில சமயம் குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்கிறேன். அவர்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கிறார்கள்! பக்கத்து வீடுதான். பெரிய பெண் கொஞ்சம் மக்கு என்று தான் கூறமுடியும். உடம்பு கொஞ்சம் பருத்து இருக்கும். மூன்றாவதும் பெண்தான். அவருக்கு நம்பிக்கை எப்படியும் ஆண் குழந்தை ஒன்று பிறக்காமல் போகாது என்று. மூன்றுக்குமேல் வேண்டாம் என்ற விளம்பரம் அவரைக் கவர்வதாக இல்லை. ஓர் ஆண் சந்ததி வேண்டும் என்ற ஒரே ஆசை தொடர்ந்து தவறுகள் செய்தார். ஐந்தும் பெண்கள் எனக்கு அந்தக் குழந்தைகள் விளையாடுவது மகிழ்ச்சியை உண்டாக்கும். என்விடு தனி வீடுதான். யாரும் இல்லை. என். அம்மாவும் நானும் தான். ஒரு மூலையில் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/14&oldid=772854" இலிருந்து மீள்விக்கப்பட்டது