பக்கம்:நனவோட்டங்கள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 0 ரா. சீனிவாசன் இப்பொழுது அவள் அதுதான் புரட்சி என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? நான் செய்ய நினைத்த புரட்சி என்று ஏற்றிச்சொல்வாளா? அப்பொழுதே சொல்லி இருக்கிறாள். நான் திருமணம் செய்து கொண்டிருந்தால் எனக்குச் சலனம் ஏற்பட்டு இருக்காது என்று, பெண் தன்னைக் காத்துகொள்ள வேண்டுமென்பது இப்பொழுது தான் தெரிகிறது. அவளுக்கு ஒரு முடிவைத் தெளிவாகச் சொல்லிவிட முடியும். காதல் வென்று விட்டது என்று அழகாகச் சொல்ல முடியும். 'கள்' தோற்றுவிட்டது; காவியம் கவர்ந்து விட்டது என்று கூற முடியும்; வன்மை என்னைக் கவரவில்லை; மென்மை என்னை விழுங்கி விட்டது என்று கூறமுடியும். அவள் முகத்தை இனிப் பார்க்க முடியாது. அவளை நான் ஏன் பார்க்க வேண்டும்? சலனமுள்ள் நெஞ்சு இனி ஒரு பக்க்த்தே நின்று நிலை பெற்றுவிட்டது. } - - - ஒவியர் என் சொந்த வாழ்க்கையைப் பற்றி ஒன்றும் பேசமாட்டார். ஒரு சிலர் அவசியமில்லாமல் தனிப்பட்ட வரின் சொந்த வாழ்க்கையைப் பற்றி ஆராய்வதே பழக்க மாகிவிட்டது. அது ஒரு அநாகரீகம் என்பதை அவர் அறிவார். நல்ல காலம் நான் இதுவரை கண்ணம்மாவைப் பற்றிக்கூட பேசியது இல்லை. அன்று நான் கேட்டிருந்தால் இன்று நிச்சயமாக அவர் என்னை மதிக்கமாட்டார். ஆபீசில் இரண்டு நாளைக்கு எந்த வேலையும் நடக்காது. பொழுது போக்குக்காக வாரப் பத்திரிகைகள் கொண்டு வருபவர்க்கு அதைப் படிக்க நேரம் இருக்காது. 'ஆபீசரின் அந்தரங்க லீலைகள்' என்று மஞ்சள் பத்திரிகைகள் செய்யும் வேலையை அவர்கள் செய்வார்கள். புரட்சி அவள் தன் உடலால் கவர்ந்தாள். அதற்கு ஒரு தனி மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. உஷா. அவள் தன் உள்ளத்தால் கவர்ந்தாள். இப்பொழுது அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/142&oldid=772857" இலிருந்து மீள்விக்கப்பட்டது