பக்கம்:நனவோட்டங்கள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் ( 141 உடலையும் கண்டேன். உள்ளமும் உடலும் ஒன்று பட்டேன். இனி நான் புரட்சியைப் பற்றி நினைக்க வேண்டிய அவசியமே இருக்காது. அவள் முதலில் பிகு' பண்ணினாள். இப்பொழுது அவள் என்ன நினைப்பாள். அவள் நான் ஒரு பைத்தியக்காரன் என்றுதான் நினைப்பாள். நல்ல வயசு உத்தியோகம். பதினாறு வயதா கிடைக்காமலா போய்விடும். 'லட்சணமாக என்ற அகராதியைத் தாராளமாகப் பயன்படுத்துவாள். வாழ்க்கையில் சலனங்கள் ஏற்பட்டன. எங்கேயோ ஒர் இடத்தில் சுழிகளும் ஏற்படுகின்றன. அதில் அகப்படும் பொழுது திக்குமுக்காடிப் போக வேண்டியும் இருக்கிறது. இந்த நிலையில் தான் நான் அகப்பட்டுக் கொண்டேன். அம்மாசொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. "காலாகாலத்தில் கலியாணம் செய்து கொள்வது நல்லது” என்று சொல்லுவார்கள். காலம் தவறிவிட்டேன் என்று நினைக்கிறேன். அவளுக்குக் கொஞ்சி விளையாடப் பேரன், பேர்த்தி தருவேன் என்று எதிர்பார்த்தாள். நான் ஏன் அந்தப் புரட்சியின் குழந்தைகளை என் குழந்தைகள் என்று சொல்லக்கூடாது. அந்தக் குழந்தைகளை அம்மாவிடம் கொண்டு போய்ச் சேர்ப்பேன். அம்மா! நான் உனக்கு இப்பொழுது குழந்தை தரமுடியாது. அப்படிக் குழந்தைகள் பெறும்வரை உன்னால் பொறுமையை இழக்க முடியாது. என் குழந்தைகள் என்று சொன்னாலும் நீ ஏற்க மாட்டாய். அவள் குழந்தைகள் என்றுதான் சொல்லுவாய். நிச்சயமாக உஷாவை வீட்டில் சேர்க்கமாட்டாய். அம்மா! அவள் தொழுவத்தில் தான் இருந்துவிட்டுப் போகட்டுமே! அவள் நல்லவள் அம்மா! தவறு செய்தது நான் தான். இதெல்லாம் அவள் எங்கே கேட்கப் போகிறாள். சுழிக்குத் தப்பினால் பூகம்பம் ஒன்று காத்து இருக்கிறது. அதையும் பார்த்துதான் தீர வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/143&oldid=772858" இலிருந்து மீள்விக்கப்பட்டது