பக்கம்:நனவோட்டங்கள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 ரா. சீனிவாசன் மூன்றாவது நிலை அதாவது அடியோடு மாற்றம் என்பது அவ்வளவு லேசான காரியம் அல்ல; சீர்திருத்தம் எளிது; சீர் அமைப்பு அதற்கு அடுத்த நிலை; உள்ளதைக்கொண்டு அமைப்பவை இவை. சம்பிரதாயத்திற்கும் சட்டத்திற்கும் வழக்கத்திற்கும் உட்பட்டவை இவை. இவற்றில் எதிர்ப்புகள் அவ்வளவாக இருப்பதில்லை. ஓரளவு வந்தாலும் சமாளித்துக் கொள்ள முடியும். இந்த மூன்றாவது நிலைதான் மிகவும் கஷ்டமானது. சமூகத்தின் சட்டத்தைப் புறக்கணித்து அதைச் சமூகம் ஒப்புக்கொள்ளும்படிச் செய்வதுதான் கடினம், சமூகத்தின் சட்டத்தைப் புறக்கணித்து விடலாம். அதை மறைத்து எப்படியாவது வாழலாம். இதைத்தான் பலர் செய்து கொண்டி ருக்கிறார்கள் எப்பொழுதாவது வெளியாகும் போது அவன் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறான். 'கெட்டவன் என்ற பட்டம் சூட்டி அவனைப் புறக்கணிப்பார்கள். அந்த நிலையை நான் ஏற்றுக்கொள்ள விரும்ப வில்லை. பிரச்சனையை எதிர்த்து ஏற்காதவன் கோழை. உண்மையை ஊருக்கு எடுத்து ஒதாமல் இருப்பது அயோக்யத்தனம். நான் மறைத்து வைப்பதால் அவளுக்கு என்ன லாபம்? மறுபடியும் அவள் அவனை இனி அடையப் போவது இல்லை. அதை அவள் விபச்சாரமாகக் கருதுகிறாள். கொண்ட கணவனாக இருந்தாலும் உள்ளம் இருக்கலாம்; அவனோடு உறவு கொள்வது விபச்சாரத்துக்குச் சமம் என்று தத்துவம் பேசுகிறாள். இனி இந்த உடம்பை அவனுக்குக் கொடுக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள். என்னைப் பொறுத்தவரை நான் உறுதியோடுதான் இருக்கிறேன். அம்மாவை நினைக்கும் பொழுதுதான் அச்சமாக இருக்கிறது. அவளுக்கு அப்பொழுதே பைத்தியம் பிடித்துவிடும்; அல்லது மனோதைரியம் இல்லாதவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/144&oldid=772859" இலிருந்து மீள்விக்கப்பட்டது