பக்கம்:நனவோட்டங்கள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 143 அடையும் இரத்தக் கொதிப்பு அவளை வந்து சேரும். ஒரு மனிதனுடைய மன நிலையை இந்த ரத்தக் கொதிப்பா லேயே தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். பாசமும் பந்தமும் மிகுதி ஆக ஆக இந்த நோய் மிகுகிறது என்று நினைக்கிறேன். பிரபல சினிமா எழுத்தாளர் ஒருவர் சொன்னார். "ஆண்டவன் தண்டிக்கிறான் என்றால் இந்த இருதயத் தாக்குதலால்தான். பணக்காரர்கள் மனமுடைந்து சாக இந்நோயைப் படைத்தான் என்று சொன்னார். அப்பொழுது அவர் சாதாரண பத்திரிகைச் சிறுகதை எழுத்தாளர். பிறகு அவர் பிரபல திரைப்படக் கதை எழுத்தாளர் ஆனார். பிரபல்யம் அடைந்தார். அவர் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் கண்டித்து எழுதினார். அவர் அத்தகைய படங்களுக்கே வசனம் எழுத ஒப்புக் கொண்டார். பிறகு டைரக்டரும் ஆனார். ஏழைகளுக்காகக் கண்ணிர் வடித்துப் புரட்சி மிக்க வசனங்களை எழுதினார். எல்லோரும் அவரைப் பாராட்டினார்கள். விரைவில் பாரதநாடு வறுமையற்ற நாடாக ஆகிவிடும் என்று நம்பிக்கை கொண்டார்கள். எழுத்தாலேயே எதையும் சாதித்துவிட முடியும் என்ற நம்பிக்கை அப்பொழுது எழுந்தது. அவருக்கும் நிறைய பணம் சேர்ந்தது. அதற்குப்பின் அவர் ஆடம்பர வாழ்வில் திளைத்தார். மேல் நாட்டு உடையில் அவருக்கு மோகம் ஏற்பட்டது. மந்திரிகளிடம் கை குலுக்கினார். அவர்கள் பாராட்டுதலுக்கும் மிக விரைவில் இரையாகிவிட்டார். தனி உடைமை கூடாது என்று பேசினார்; தனிச் சொத்து நிறைய சேர்த்து வைத்தார். கதர்த்துணி கட்டினார். மில்களுக்கு அதிபர் ஆனார். அதற்குப்பிறகு அவர் எழுத்தே வரவில்லை. படங்கள் தோல்வி கண்டன. எழுத்துலகம் அவரை மறக்கத் தொடங்கியது. அவருடைய முடிவுக்காலம் அணுகியது. யாரும் எதிர்பார்க்கவில்லை. இதயத்தாக்குதலால் பிரிய மனம் இல்லாமல் இந்த மனித வாழ்க்கையை நீத்தார். அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/145&oldid=772860" இலிருந்து மீள்விக்கப்பட்டது