பக்கம்:நனவோட்டங்கள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ரா. சீனிவாசன் வாழ்வில் ஏற்பட்ட முரண்பாடுகள் எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர் வாழ்க்கையை எண்ணிப் பார்க்கிறேன். தூய சிந்தையும் மக்கள் எழுத்தும் அவர் பண்பாக இருந்தன. பின்பு அவர் படம் அதிகம் ஓடியதுடன் காசு சேர்ந்தது. இவர்தானா மக்கள் எழுத்தாளர் என்று ஆச்சரியப்படும்படி மாறிவிட்டார். எனக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கம் சாதாரண வாழ்க்கை நிகழ்ச்சியை நேரில் சொல்ல முடியாமல் நான் படித்த நாவல்களைக் கொண்டும் பார்த்த உண்மை மனிதர்களையும் கொண்டும் சொல்வது எனக்குப் பழக்கமாகிவிட்டது. என்னைச் சிலர் அனுபவம்' என்றே புனை பெயர் வைத்து அழைத்தார்கள். அது என் நினைவுக்கு வருகிறது. கதாசிரியனுக்கு இருக்க வேண்டிய வாழ்க்கை அனுபவங் களைப் பேச்சுக்கு இடையே புகுத்துவது எனக்குப் பழக்கமாகி விட்டது. தேவைக்குமேல் உழைப்பதால் இந்த நோய் வந்து விடுவதில்லை. ஆசா பாசங்களால்தானே இந்த நோய் வந்து விடுகிறது. வயதானவர்கள் இதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். தாம் வளர்த்த பிள்ளைகள் போகப் போக முழுவதும் மாறிவிடுகிறார்கள். அம்மா மீது யார் அதிகம் பாசம் காட்டுகிறார்களோ அவர்கள் நிச்சயம் வருங் காலத்தில் தம் மனைவி மீது பாசம் காட்டுவார்கள். ஆரம்பத்தில் மகிழ்ந்தவர்கள் பின்னால் துக்கப்படுவார்கள். என்மீது அவன் உயிரே வைத்திருந்தான். கலியாணமான வுடன் அவள் கிழித்த கோட்டைத் தாண்டுவது இல்லை என்று வருத்தப்படுகிறார்கள். தாய் கிழித்த கோட்டைத் தாண்டாதவர்கள்தான் இப்பொழுது மனைவி கிழித்த கோட்டைத் தாண்டுவது இல்லை. மகன் தன்னிடம் பாசம் காட்டுவான் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடை கிறார்கள். அதுவே அவர்களுக்கு மனநோயை உண்டாக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/146&oldid=772861" இலிருந்து மீள்விக்கப்பட்டது