பக்கம்:நனவோட்டங்கள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 145 விடுகிறது. அது வளர்ந்து இரத்தக் கொதிப்பில் கொண்டு போய்விடுகிறது. மகன் தன்னைவிட்டு விலகுவதைக் கண்டு தாய் மகிழ்ச்சி அடைய வேண்டும். அவன் மற்றவளின் அன்புக் கரத்தில் அகப்பட்டுத் தத்தளிக்கிறான். அதிகாரத்தால் அவள் அவனை ஆட்கொள்ளவில்லை. அவள் அவன்மீது உயிர் விடுகிறாள். தாய் காட்டிய பாசத்தைவிட அவள் அதிகம் காட்டுகிறாள். தாய் ஒரு மகன்மீது பாசம் காட்டுவதில்லை. தன் பிள்ளைகள் அனைவரின் மீதும் பாசம் காட்டுகிறாள். வந்தவள் ஒருவன் மீது முழு அன்பைச் செலுத்துகிறாள். தாயின் அன்பைவிட மனைவியின் அன்பு உயர்ந்து விடுகிறது. இதை உணராத தாய் அவன் மாறிவிட்டானே என்று நினைத்து வருந்துகிறாள். மற்றும் ஒன்று சின்ன வயதில் அவனை எடுத்துச் சீராட்டி அவனைப் பெரியவன் ஆக்கினாள். அவள் கொடுத்ததை எல்லாம் அவன் வாங்கிக் கொண்டான். வயதானதும் தாய் திரும்ப ஏதோ எதிர் பார்க்கிறாள். அவன் அவளுக்குக் கொடுக்க இயலவில்லை. இயற்கை அவனைத் திசை திருப்பிவிடுகிறது. மற்றவர் களுக்கு அவன் கொடுக்க வேண்டிய கடமையும் கட்டுப்பாடும் ஏற்பட்டு விடுகிறது. தாய் மகனிடத்தில் எதையும் எதிர்பார்க்கக்கூடாது. அதை எதிர்பார்க்கும் பொழுதுதான் அவன் விலகிவிடுகிறான். தான் தன் மகனுக்குச் செய்யவேண்டிய கடமை முடிந்துவிட்டது. இனி அவன் மற்றவருக்காக வாழ்வதுதான் சரி என்ற எண்ணம் உண்டாகாவிடில் வேதனைப்பட வேண்டியதுதான். பாசம் அறிவை மயக்கிவிடுகிறது. அதனால் மனம் கெடுகிறது. இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது. நீண்டநாள் வாழ முடிவதில்லை. என் தாய்க்கு இதை எப்படி எடுத்துக் கூறமுடியும்? அவளை விட்டு நான் தொடக்கத்திலேயே விலகுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/147&oldid=772862" இலிருந்து மீள்விக்கப்பட்டது