பக்கம்:நனவோட்டங்கள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ரா. சீனிவாசன் அவள் லட்சியத்தை நான் நிறைவேற்ற முடியவில்லை. என்ன புதிய லட்சியம்? ஆதாம் ஈவ் தோன்றிய நாள் முதல் இந்த லட்சியம் தான் ஒவ்வொரு தாயும் விரும்புவது. மகனுக்கு மனைவி யல்ல; தனக்கு மருமகள். தன்னை வைத்தே எதையும் பார்க்கும் பொழுது மனம் உளையத்தான் செய்கிறது. அவளை எப்படித் திருத்துவது. யாரையும் நாம் திருத்த முடியாது. அவர்களே திருந்துவார்கள். காலம் வரும் பொழுது அதுவரை காத்திருக்க வேண்டியதுதான். இதில் திருத்துவதற்கு என்ன இருக்கிறது. மனமாற்றம் ஏற்பட வேண்டும். மனிதன் உடம்பை மட்டும் கவனித்தால் நீண்டநாள் வாழ முடியாது. நூறாண்டு வாழும் கட்சியினர் காப்பி' குடிக்கக் கூடாது என்று சொல்லி எப்படியோ உடம்பைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றனர். மனம் நன்றாக இருக்க வேண்டும். அப்படியென்றால் பாசபந்தங்களுக்குக் கட்டுப் பட்டு அதிலேயே ஆழ்ந்து விடாமல் இருப்பதுதான் மனத் தூய்மைக்கு வழி செய்யும் என்று நினைக்கிறேன். பெரிய பெரிய கட்சிகள் எல்லாம் அழிவது கூட வேண்டியவர் களுக்கு நன்மை செய்து பொது நன்மையை மறப்பதால் தான். தனி மனிதன் நிலைமைதான் கட்சிகளுக்கும் ஏற்பட்டு விடுகின்றன. கட்சிகளுக்கும் இதயத் தாக்குதல் ஏற்படாமல் இல்லை; தவறு செய்து கொண்டே இருந்தால் கட்சிகள் சுக்குநூறாகச் சிதைந்து விடுகின்றன. ஒரு சிலருக்குக் கட்சிகள் நன்மை செய்கின்றன. அந்த ஒரு சிலர் எப்படிக் கட்சியைக் காப்பாற்ற முடியும்? நினைத்துப் பார்க்கிறேன். கண்ணம்மாளை ஆசைப் பட்டது எவ்வளவு பயங்கரமான விளையாட்டு என்பதை, விதவையை மணப்பது தவறு அல்ல; இரண்டு குழந்தை களுக்குத் தாயை மணப்பது எவ்வளவு பெரிய சுமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/148&oldid=772863" இலிருந்து மீள்விக்கப்பட்டது