பக்கம்:நனவோட்டங்கள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 147 இரண்டுக்குமேல் வேண்டாம் என்ற விளம்பரங்களைக் கண்டு நான் என்ன பதில் சொல்ல முடியும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். 'என்னுடைய குழந்தைகள் உன்னுடைய குழந்தைகளோடு விளையாடுகின்றன. அந்தப் பழமொழியில் பாதி உண்மையாகிவிடும். மேல்நாட்டு நாகரிகம் அவ்வளவு தாராள மனப்பான்மை உடையது என்பதைத்தான் அப்பழமொழி காட்டுகின்றது. அதைப் பார்த்து என்னால் எள்ளி நகையாட முடியவில்லை. அது அவ்வளவு பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது என்பதைத்தான் என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. விதவைக்கு உதவவேண்டுமே தவிர மறுபடியும் அவளுக்கு வாழ்வு தரவேண்டும் என்பது அவசரப்பட்டு எடுத்துக் கொண்ட முடிவு என்றுதான் நினைக்கிறேன். நம் நாட்டில் உஷாவைப் போல வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டவர்கள் ஏராளம்; அதைவிட அவள் தங்கைகள் ஏராளம். இந்தச் சூழ்நிலையில் புரட்சியைப் பற்றி நினைத்தது அவள் பின் சென்றது அவ்வளவு பொருத்தமாகப் படவில்லை. பெர்னாட்ஷா சொன்னார் 'ஏழையாகப் பிறப்பது குற்றம்' என்று, அவளை அணைத்துக் கொண்டு ஆதரவு தருவது அவ்வளவு நியாயம் இல்லை. அதற்கு ஒவியர் இருக்கிறார். அவர் தொண்டுதான் நியாயமான தொண்டு. ஒரு பெரிய தவறு செய்த பிறகுதான் எல்லாத் தவறுகளும் கவனத்துக்கு வருகின்றன. இரக்கம் காட்ட வேண்டிய இடத்தில் காதல் காட்டினேன். இரக்கத்துக்கும் காதலுக்கும் சில சமயங்களில் வித்தியாசம் இல்லாமல் போய்விடுகிறது. என் நிலைக்கு நான் குப்பத்துக்குச் சென்றது; அந்த ஓவியரோடு பழகியது; யாரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஏழைகளைப் பற்றி எண்ணுவது அவர்களுக்காக ஏதாவது செய்ய நினைப்பது தனிப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/149&oldid=772864" இலிருந்து மீள்விக்கப்பட்டது