பக்கம்:நனவோட்டங்கள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 13 மேசையொன்று இருக்கும். என் ஊதாரித் தனத்திற்கேற்ப எல்லாம் அதிக விலை கொடுத்தே வாங்கி வந்தேன். வருகிறவர்கள் என்னைப் பற்றி விசாரிப்பதை விட என் மேசையையும், நாற்காலியையும் விசாரித்துக் கொண்டிருந் தார்கள். என் வீட்டுப் பொருள் அனைத்துமே விசாரனைக்குள் ஆயின. தயவு செய்து நீங்கள் தவறாகக் கருத வேண்டாம். எல்லாம் அதிக விலை கொடுத்து வாங்கியது. அதனால் அவை விசாரணைக்குள் ஆயின. பொதுவாகக் கல்யாணமாகாதவர்கள் எப்படி அலங் கோலமாக அறையை வைத்துக் கொள்வார்களோ அதில் பாதி என்னிடம் பார்க்கமுடியும். இந்த உலகத்தில் மறக்க ஏதாவது வேண்டும் என்றால் அது என்னைப் பொருத்த வரையிலும் புத்தகங்கள் தாம். என் மேசை மேல் எப்பொழுதும் ஏதாவது புத்தகம் இருக்கும். அதுகூட ஒரு கெட்ட பழக்கம் என்று நினைக்கிறேன். சிகரெட்டு குடிப்பவர்கள். தொடர்ந்து சங்கிலி போலப் பிடிப்பதைப் பார்த்திருக்கிறேன். அதே போலத் தொடர்ந்து நான் எதையாவது படித்துக்கொண்டு இருப்பது பழக்கமாகிவிட்ட்து. ஒருசில ஆபீஸ் கடிதங்கள் மேசைமேல் சிதறிக் கிடக்கும். யாராவது எழுத்தாளர்கள் வந்து பார்த்தால், இதைத்தான் நினைப்பார்கள். காதல் கடிதம் எழுதித் தீர்ந்துவிட்ட நிலையில் பேனாவில் 'மை' இல்லாமல் அசந்து உட்கார்ந்து இருப்பதாக நினைப்பார்கள். என்னையும் அறியாமல் என் முகத்தில் வெறிச்சென்ற நில்ைமை காணப்பட்டது. என்னைப் பார்த்தால் அவர்கள் கற்பனை அப்படித்தான் நினைக்கும். தனிமை என்பது எவ்வளவு கொடுமை என்பது எனக்குத் தான் தெரியும். வாலிபன் என்றால் உடனே காதல். இது எழுத்தாளனின் கற்பனை. எழுத்தாளர்கள் யாரும் என் வீடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/15&oldid=772865" இலிருந்து மீள்விக்கப்பட்டது