பக்கம்:நனவோட்டங்கள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ( ரா. சீனிவாசன் மனிதரால் சாதிக்கக் கூடிய செயல் அல்ல; சமுதாயத்தின் கூட்டுப் பொறுப்பு, அது. தனி மனிதர் உதவி என்பது பிச்சைக்காரத் தனத்தைத்தான் வளர்க்கும். கொடை யாளிகள் என்று சிலர் பெயர் எடுக்கலாம். இந்த நாட்டின் ஏழ்மைக்குக் காரணம் என்ன? மனித முயற்சிகளையும் உழைப்பையும் வீண்படுத்துவது தான். தேவைகளைப் பெருக்கிக் கொண்டு மற்றவர்களுக்குப் பகிர்ந்து அளிக்க முடியாத நிலைதான். கல்வியில் மனித முயற்சியையும் உழைப்பையும் வீண்படுத்திக்கொண்டு இருக்கிறோம். ஒரு வேலை தான் காலி என்றால் ஒராயிரம் விண்ணப்பங்கள் வருகின்றன. இது எதைக் காட்டுகிறது. அந்தத் தகுதியைப் பெற்றவர்கள் ஒராயிரம் பேர் என்பதைக் காட்டுகிறது. இந்த ஒராயிரம் பேரை உற்பத்தி செய்வது வீண்தானே. ஏனைய பொருள் உற்பத்தியை எடுத்துக்கொண்டால் தேவையை ஒட்டித்தான் அவை உற்பத்தி செய்யப் படுகின்றன. வாங்குவார் இல்லாவிட்டால் உற்பத்தி செய்யமாட்டார்கள். போட்டி' என்ற ஒரு பூதத்தை எழுப்பி விட்டு அதற்காகத்தான் நம் இளைஞர்களைப் பலியாக்குகிறோம். கல்வி என்ற பெயரால் கோடிக் கணக்கான பணம் செலவு செய்யப்படுகிறது. அவர்கள் கற்ற கல்வி அவர்க்கும் பயன்படுவதில்லை; நாட்டுக்கும் பயன்படுவதில்லை. ஒரு உத்தியோகத்திற்கு S.S.I.C போதும் என்றால் ஏன் எம்.ஏ.வை எடுக்க வேண்டும். அப்படி எடுப்பதால் வசதி இல்லாத குடும்பங்கள் எம்.ஏ. படித்தால்தான் வேலை கிடைக்கும் என நம்புகின்றன. அதற்காக விவசாயத்தைக் கவனிக்காமல் உள்ள தானியத்தை விற்றுப் பிள்ளைகளுக்குப் பணம் அனுப்பு கிறார்கள். பிள்ளையும் பயன்படுவதில்லை. விவசாயம் செய்ய ஆட்களும் கிடைப்பதில்லை. உள்ள பணமும் செலவழித்துக் கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/150&oldid=772866" இலிருந்து மீள்விக்கப்பட்டது