பக்கம்:நனவோட்டங்கள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 149 கல்வித் தகுதி என்ற பேரால் நம் இளைஞர்களின் நேரம் பொழுது உழைப்பு அவ்வளவையும் பாழ்படுத்து கிறோம். அரசாங்கம் பொதுத் தேர்வுகள் நடத்தி ஆட்களைத் தேர்ந்து எடுக்கிறார்கள். இதில் நிறைய மதிப் பெண் வாங்குகிறவர்களில் ஒரு சிலரை மட்டும். எடுத்துக் கொள்கிறது. மற்றவர்கள் அந்த வேலைக்குத் தகுதி இல்லை என்று நெஞ்சு தொட்டுக் கூற முடியுமா? பொது அறிவு என்ற பெயரால் தேவை இல்லாத துணுக்கமான செய்திகளை அவர்கள் படிக்கவேண்டி இருக்கிறது. இன்று 'குவிஜ் என்ற பெயரால் தொலைக்காட்சியில் கேள்விகள் கேட்டு விடை சொல்கிறவர்களுக்கு மதிப்பெண் போடுகிறார்கள். கேள்விக்கு விடை தருகிறவர்கள் அறிவாளிகள்; மற்றவர்கள் முட்டாள்கள். இதுதான் இன்றைய மதிப்பீடு. தொழிற் பதிவு நிலையங்கள் நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டன. முறைப்படி வேலை வாய்ப்புகளையும் பங்கிட்டுத்தர ஏற்பட்ட நிறுவனம் அது. ஒரு பதிவு நிலையமாகப் பயன்படுகிறதே தவிர அது வேலை வாய்ப்புத்தேடும் நிலையமாகச் செயல்பட வில்லை. ஒரு குறிப்பிட்ட வேலைக்கு இந்தத் தகுதி போதும் என்றால் அதற்கு மேலும் படித்தவர்களை அந்த வேலைக்கு வைக்கக் கூடாது. இந்த ஒரு கோட்பாடு செயல் முறையில் நடந்தால் ஆயிரக் கணக்கான இளைஞர்களின் உழைப்பையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம். கல்லூரிகளில் இந்நாளில் இருக்கின்ற அமைதியின்மையின் அடிப்படைக் காரணம் அவனுக்குப் படிப்பில் இருக்கும் நம்பிக்கை குறைத்து விட்டதுதான். சமுதாயத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தால் தவிர தனக்கு எதிர்காலம் இல்லை என்பதை உணர்கிறான். "சம உடைமை' என்ற போராட்டத்தில் அவன் கால் எடுத்து வைக்கிறான். பிற்பட்ட வகுப்பினர்க்குச் சம்பளச் சலுகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/151&oldid=772867" இலிருந்து மீள்விக்கப்பட்டது