பக்கம்:நனவோட்டங்கள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 ல் ரா. சீனிவாசன் தரப்படுகின்றது. அவர்கள் போட்டிபோட்டுப் படிக்க வேண்டி இருக்கிறது. பேர்ட்டியில் அவர்கள் பின் தங்கி விடுகின்றார்கள். பண்பட்ட சமுதாயம் அதில் முன் நிற்கின்றது. ஒருவரை உயர்த்துவதும் மற்றவரைத் தாழ்த்து வதும் தனிப்பட்ட முயற்சியில் வெற்றி பெறலாம். சமுதாயக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் பொழுது பிற்பட்ட வகுப்பினர் மேலே உயரலாம்; அதேசமயத்தில் மேல் நிலை மாணவர்கள் தாழ்நிலை அடைகின்றனர். மறுபடியும் அவர்கள் பிற்பட்ட வகுப்பினர் ஆகப்போகின்றனர். கல்வி நிலையில் போட்டிகளைத் தவிர்த்தால்தான் சமூகத்தில் சமநிலையைக் காணமுடியும். இந்தப் போட்டியின் விளைவுதான் இன்று நாட்டில் பெருகிவரும். 'கான்வெண்டு ஆங்கிலப் பள்ளிகள், அங்கே படித்தால்தான் தம்பிள்ளைகள் மேல் நிலையை அடைய முடியும் என்று நினைக்கிறார்கள். சாதாரண குமாஸ் தாக்கள் கூட தம் பிள்ளைகளை அங்குச் சேர்க்கிறார்கள். தம் வருவாயில் பெரும் பங்கு படிப்புக்குச் செலவு ஆகிவிடுகிறது. விவசாயக் குடும்பங்கள் கொஞ்சம் வசதி உடையவர்கள் தம்பிள்ளைகளைப் படிப்பதற்காகவே குடும்பம் குடும்பமாக நகரங்களில் குடி ஏறுகிறார்கள். நாட்டுப் பண்பாட்டில் மக்கள் நம்பிக்கை இழந்து விடுகின்றனர். குவிஜ் கேள்வி விடைகளும் ஆங்கில நடை உடைபாவனைகளும் இந்த மண்ணோடு ஒட்டாத உறவும் தான் விளைகின்றன. கல்வியில் இந்தப் போட்டியை ஒழித்தால் நாட்டில் பாதிப்பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியும். படிப்பில் முதல்வகுப்பு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு இப்படிச் சாதிப் பிரிவுகள் ஏற்படுத்தப் படுகின்றன. இந்தத் தேவையற்ற பாகுபாடுகள் மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி விடுகின்றன. சம உரிமை சம அந்தஸ்து, சம உடைமை' என்ற சமதர்மக் கொள்கைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/152&oldid=772868" இலிருந்து மீள்விக்கப்பட்டது