பக்கம்:நனவோட்டங்கள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன. வோட்டங்கள் 151 இவை முரண்பட்டவைகள், ஒரு பக்கம் சமத்துவம் பற்றிப் பேசுகிறோம். நடைமுறையில் எந்தத் திட்டமும் அதற்கு ஏற்ப அமைக்கப்படுவதில்லை. "வலிமை உடையது வாழும்” என்ற தத்துவம்தான் இன்று செயல் முறையில் நடைபெறுகிறது. இந்த அடிப்படையில்தான் சமூகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. பிறகு சமநீதி சமத்துவம்', 'சமதர்மம்' என்ற சொற்ககளுக்கு என்ன அர்த்தம் இருக்கின்றது. காட்டு நீதிதான் வலிமை உள்ளது வாழும் என்பது, கூட்டம் கூட்டமாக மான்கள் வாழவில்லையா? பசு, ஆடு முதலிய மிருகங்கள் ஒன்றைஒன்று அடித்துக் கொள்வதில்லை. தாமும் வாழ்கின்றன. சிங்கம் ஒன்று இரண்டு இருந்தால் போதும். இந்த மான் கூட்டத்தை ஒழித்துக் கட்ட நாடு காடாகக் கூடாது என்றால் நல்லவை வாழ வழி செய்ய வேண்டும். வல்லவை வாழ வழி செய்தால் அது சமத்துவத்தைத் தராது. என் மனம் புரட்சியை நோக்கிச் சென்றதால் அங்குள்ள சூழ்நிலைகளை அறிய முடிந்தது. ஒவியர் இந்தச் சமுதாயத்தைப் பற்றிய சிந்தனைகளைத் தந்தார். அந்த நோக்கோடு பார்க்கும்பொழுது நான் செய்தது தவறாகத் தெரியவில்லை. சமுதாயச் சட்டத்தில் சிக்குண்டு அடிமைப் பட்டுக் கிடந்த ஒருத்திக்கு விடுதலை தந்த பெருமை எனக்கு உண்டு என்று எண்ணம் எழுகிறது. உஷாவின் தங்கைக்கு வாழ்வு தானாக அமையும். உஷாவுக்கு? அந்தப் பிரச்சினை தீர்வதற்கு வேறு என்ன வழி இருக்கிறது? நான் எப்படிக் குற்றவாளி ஆகமுடியும்? அவளுக்கு வாழும் உரிமை தரப் படவில்லை. அது அவ்வளவு சீக்கிரம் பறிபோவது குற்றம்தானே. அதை மாற்றியமைப்பதில் தவறு இருப்பதாக இல்லை. இந்த மூன்றாவது நிலையை மாற்றி அமைப்பதை யாரும் அவ்வளவு சீக்கிரம் வரவேற்பதில்லை. கல்வியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/153&oldid=772869" இலிருந்து மீள்விக்கப்பட்டது