பக்கம்:நனவோட்டங்கள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 ல் ரா. சீனிவாசன் சீர்திருத்தம் என்று பேசுவார்களே தவிர மாற்றம்' என்பதை அவ்வளவு தூரம் ஒப்புக் கொள்வதில்லை. மாலைக் கல்லூரியில் தான் இனி வருங்காலத்தில் நிறைய இடம் கேட்பார்கள். அங்கே அமைதி இன்மையைக் காண முடியாது. வேலை கிடைத்தவர்களுக்குத் தான் மேற்படிப்பு என்ற திட்டம் உருவானால் மாணவர்கள் கிளர்ச்சிகளைத் தவிர்க்க முடியும். வேலைக்குக் கல்வியைப் பயன்படுத்தும் பொழுது அது தோல்வியை அடைகிறது. வேலை தர முடியாத கல்வித்திட்டம் வீண்தானே. அதே போலக் கிளர்ச்சிகள் நடைபெறுகிறது என்றால் 'வசதிகள் தேவை' என்ற தத்துவத்தை உண்டாக்கும் பொழுது கிளர்ச்சிகள் நடைபெறத்தானே செய்யும். வசதிகள் தேவை என்ற நிலை மாறவேண்டும். வசதிகளை அனுபவிக்க முடியாது. அவற்றைத் தேடக்கூடாது என்ற நிலை ஏற்பட்டால் தானே மனநிறைவு ஏற்படுகிறது. விலை வாசி உயர்வுகூட இந்தப் போட்டியால்தான் ஏற்படுகிறது. எப்படியாவது பணம் சேர்க்க வேண்டும் என்ற தத்துவம் ஊறிவிட்டது. இவை எல்லாம் சமதர்மத்துக்கு மாறான கொள்கைகள், சமதர்மப் பாதையில் நாடு வேகமாக இயங்குகிறது என்றால் இந்தப் பிற்போக்குச் சக்திகள் தாமாக மறைந்துவிடும். அதில் அரசியல் கட்சிகள் நம்பிக்கை வைத்துச் செயல்படத் தொடங்கவேண்டும். அப்பொழுதுதான் நாட்டுக்கு விமோசனம் ஏற்படும் என்ற எண்ணம் உண்டாயிற்று. குப்பத்துத் தொடர்பு எனக்குக் கற்றுத் தந்த பாடங்கள் இவை. இந்த வைத்தியப் படிப்புப்பற்றி எவ்வளவு முரண்கள் விவாதங்கள்; லஞ்ச ஊழலே இதைச் சுற்றித்தான் இயங் குவதாகப் பேசப்படுகிறது. ஒரு நாட்டு அமைச்சு இந்தச் சின்ன விஷயத்தில் தன் பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டிய தேவையே இல்லை. நேர்முகத்தேர்வு தேவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/154&oldid=772870" இலிருந்து மீள்விக்கப்பட்டது