பக்கம்:நனவோட்டங்கள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 9 153 இல்லை; வெறும் எழுத்துத் தேர்வு போதும் என்று பேசிக் கொள்கிறார்கள். ஏற்கனவே மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு வருகிறார்கள். மறுபடியும் தேர்வு வைப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. மிகச்சிறந்த மாணவனும் இரண்டாவது முறை வைக்கப்படும் தேர்வில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போகலாம். ஏன் இந்தத் தொல்லை. குறிப்பிட்ட மதிப்பெண்கள் இந்தத் துறைக்கு வேண்டுமென்று முதலில் கூறி அறுதிசெய்து கொள்ளட்டும். அந்த மதிப்பெண் உள்ள மாணவர்களின் பெயர்கள்ைக் குலுக்குச் சீட்டுப் போட்டு எடுக்கட்டுமே! இந்தப் போட்டி மனப்பான்மையை ஒழித்துவிடலாமே. இடம் கிடைக்காத வர்களைத் தகுதியற்றவர்கள் என்று கூற தேவை இல்லை. 'வல்லமை தான் வாழவேண்டும் என்ற கொள்கையால் தான் நாட்டிலே கேடுகள் விளைகின்றன. இந்தச் சீட்டு முறைப்படி எடுத்து விட்டால் யார்மீதும் எந்தக் குறையும் கூறமுடியாது. அவரவர் அதிருஷ்டம் துரதிருஷ்டம் எப்படியாவது முடியும். 'ஊழல் நேர்வதற்கும் வாய்ப்பு இல்லை. அவசியமில்லாமல் மாணவர்கள் தேர்வுகள் எழுதி மன உளைச்சல் பட வேண்டியது இல்லை. யார் நாம் சொல்லிக் கேட்கப்போகிறார்கள். சொன்னால் சிந்தித்துப் பார்க்கட்டுமே. படிப்பு முறையில் போட்டி முறை ஒழிந்தால்தான் உண்மையான கல்வி நாட்டில் உண்டாகும். தேர்வுக்கு மதிப்புத்தரக் கூடாது; அறிவுக்கும் மனிதனுக்கும் மதிப்புத் தர வேண்டும். இவை எல்லாம் சமுதாயத்தைப் பற்றி எழும் சிந்தனைகளாக என்னிடம் எழுகின்றன. என்ன செய்வது எதைப்பற்றியோ பேசிக் கொண்டிருந்த நான் வேறு விஷயத்தில் மனம் ஆழ்ந்துவிட்டேன். காதல் விஷயம் கதைக்குத் தேவையாக இருக்கலாம். அது சமுதாய வளர்ச்சிக்கு ஆக்கத்திற்கு அவ்வளவு அவசியம் என்று எப்படிக் கூறமுடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/155&oldid=772871" இலிருந்து மீள்விக்கப்பட்டது