பக்கம்:நனவோட்டங்கள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ரா. சீனிவாசன் சமுதாய நிலையில் எந்த அடிப்படை மாற்றம் விரும்புகிறேனோ அதைத்தான் என் சொந்த வாழ்வில் அமைத்துக் கொள்கிறேன். அப்பொழுதுதான் பெண்ணுக்கு நீதி கிடைக்கிறது. சம்பிரதாயப்படி பார்த்தாலும் திருமணம் எதற்கு நடைபெறுகிறது. சமுதாயத்தைச் சாட்சியாக வைத்துத் தனி இருவர் செய்து கொள்ளும் ஒப்பந்தம்தான் திருமணம் என்றால் அந்தச் சமுதாய நல்லெண்ணத்துக் காகவாவது மதிப்புத் தரவேண்டுமே ! அவள் சமுதாயத்தைச் சாட்சியாக வைத்து அவனை மணந்தாள். என் மனச் சான்றைச் சாட்சியாக வைத்து அவளோடு இணைந்தேன். அவன் சுரண்டல் கட்சியைச் சேர்ந்தவன். அவள் சுரண்டப்பட்டவள். அவளுக்குத் துணையாக நிற்பதுதான் சமூகநீதி. எளியோரை வலியார் வாட்டுதல் அநீதி; எளியோர் பக்கம் நின்று அவர்களை வாழ வைப்பதுதான் சமநீதி. இந்தச் சமநீதியின் பார்வையின் முன்னால் நான் செய்தது குற்றமாக எனக்குப் படவில்லை. வள்ளுவர் குறள்வழி நான் குற்றவாளிதான். பிறன் மனை நயத்தல்' குற்றம்தான். அவளை என் மனைவியாக ஆக்கிக் கொண்ட பிறகு அது எப்படிக் குற்றமாகும். பழங்காலத்தில் விவாகரத்து என்பது இல்லாத காலம். அவர்களுக்குள் வெறுப்புப்பூசல் வந்தால் அது ஊடலாகத் தான் இருக்கும். அவன் பரத்தமையை விரும்பினால் அவள் ஊடல் கொள்வாள். மனைவி பொருள் கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்த்ததாக எந்த இலக்கியமும் சொன்னது இல்லை. ஆண்மகன்தான் பொருள் முயற்சி செய்தான். காடும் மேடும் கடந்து நாடுகள் சென்று பொருளைத் திரட்டி வந்தான். 'வினையே ஆடவருக்கு உயிர் ஆக இருந்தது. நாணமே பெண்ணுக்கு அழகைத் தந்தது. இன்று அவள் வெளியில் சென்று சம்பாதிக்க வேண்டும். வீட்டில் சமையலும் செய்ய வேண்டும். இயற்கை விதித்த கட்டளையை நிறைவேற்ற வேண்டும். தாய்மையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/156&oldid=772872" இலிருந்து மீள்விக்கப்பட்டது