பக்கம்:நனவோட்டங்கள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 155 விட்டு அவள் விலக முடியாது. அவளே மகனைப் பள்ளிக்கும் அழைத்துச் செல்கிறாள். இன்று அவள் தந்தை யாகவும் இருந்து கடமையாற்றுகிறாள். அவள் அழகாக இருந்ததை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அவள் அழகை மற்றவர்கள் ரசிக்கக் கூடாது என்ற மனப்பான்மை எப்படியோ உண்டாகிவிட்டது. பல பேர் அப்படித்தான் நினைக்கிறார்கள். தன் மனைவியின் அழகை மற்றவர்கள் ரசிப்பதைப் பொறுக்க மாட்டார்கள். மனைவிதான் அவனுக்கு உரியவள். அழகு காண்பவர் அனைவர்க்கும் உரிய பொது உடைமை. இந்த வித்தியாசத்தை உணர வேண்டும். கண்ணால் அழகைப் பருக அனைவர்க்கும் உரிமை உண்டு. அந்த உரிமையைத் தான் அவன் மதிக்கமாட்டான். இதுதான் அவன் மனச்சிக்கல். "ஏன் நீ அதிகமாக ஒப்பனை செய்து கொள்கிறாய்” இது அவன் கேட்ட கேள்வி. அழகாக இருக்க வேண்டுவது ஒவ்வொருவரின் கடமை. இது சமுதாயத்துக்கு இந்த வகையில் நாம் கட்டுப்பட்டவர்கள் தான். சிலர் உடம்பையே மூடி மறைத்துக் கொள்கிறார்கள். இரண்டு கண்களுக்கு மட்டும் ஒளி தருகிறார்கள். அவள் இந்த உலகத்தைப் பார்க்கலாம். உலகம் அவளைப் பார்க்கக் கூடாதாம். இந்தப் பழக்கம் எல்லாம் நாட்டை விட்டு மறைந்து விட்டன. இன்று ஆணும் பெண்ணும் சமுதாயத்தில் தொழிலாளர்கள் ஆகி விட்டனர். இருவரும் தொழில்துறையில் சமம் அடைந்து விட்டனர். எந்தத் துறையிலும் பெண் சக தொழிலாளியாகி விட்டாள். அவள் தனக்குத் தான் உரியவள் என்று நினைத்தான். அவளுக்கு உரிமை கொடுக்க மறுத்தான். அவளை அடக்கினான். அவள் அவனைத் திருத்த முயன்றாள். தன்னைச் சீர்படுத்திக் கொண்டாள். பிறகுதான் அடிப்படை மாற்றத்துக்கு இடம் தந்தாள். இவ்வளவும் அவளைப்பற்றி நான் எண்ணிய எண்ணங்கள். அவள் மனநிலை தூய்மையானதுதான். தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/157&oldid=772873" இலிருந்து மீள்விக்கப்பட்டது